தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் 14 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவே சுட்டுக் கொன்றுள்ளதாக Lanka News Web இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
சிறப்புச் செய்தி
பாலச்சந்திரன் கொலையின் சூத்திரதாரி யார்?
நிதியமைச்சின் செயலாளர் பதவிக்கு பீ.க்குப் பதிலாக ரஞ்சித் பண்டாரவை நியமிக்க முனைப்பு!
நிதியமைச்சின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவை அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை நியமிக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்தளாக ஆளும் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
பிரதமர் பதவிக்கு கோதாபய ராஜபக்ஷ!
பிரதமர் டி.எம். ஜயரத்னவிற்கு தற்போது அவரது பணிகளை செய்ய முடியாத வகையில் சுகயீனமுற்றிருப்பதால், அவருக்குப் பதிலாக கோதாபய ராஜபக்ஷவை அந்தப் பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
சரத் பொன்சேக்கா விடுவிக்கப்பட்ட சட்ட ஆவணம் இதோ!
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா எதிர்காலத்தில் அனுபவிக்கவிருந்த சிறைத்தண்டனையை மாத்திரமே ஜனாதிபதி இரத்துச் செய்துள்ளதாக நீதியமைச்சின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றப் புலனாய்வு விசாரணை அதிகாரிகளுக்கு லஞ்சமாக ஜப்பான் வாகனங்கள்!
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கொலைக் குற்றச்சாட்டிலிருந்து மீட்டுக்கொள்ள விசாரணை அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உட்டதரப்புத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் வலையிலிருந்து நழுவிவரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அரச தொலைக்காட்சி பிரதானி!
நீதிமன்றினால் பலமுறை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அரச தொலைக்காட்சியின் பிரதானி சுதர்மன் ரந்தலியகொட தொடர்ந்து பொலிஸாரின் வலையிலிருந்து நழுவி வருகிறார்.
பொரல்லை மயானத்தில் நடு இரவில் தகனம்! எரிக்கப்பட்டவர்கள் யார்?
கொழும்பு பொரல்லை மயானத்தில் இன்று அதிகாலை (22) 1.00 மணி முதல் 2.00 மணி வரை எரிவாயு மூலம் இரண்டு உடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கடத்திச் செல்லப்பட்டுள்ள லலித், குகன் குறித்து திடுக்கிடும் தகவல்கள்!
கடத்திச் சென்று தடுத்துவைக்கப்பட்டு, மரணத் தருவாயில் உள்ள மக்கள் எழுச்சிய இயக்கத்தின் செயல்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோர் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை தேசியக் கொடியுடன் பதிவுசெய்யப்பட்டுள்ள ஈரான் கப்பல்களின் பெயர் விபரங்கள் இதோ!
ஈரானுக்குச் சொந்தமான 04 வணிகக் கப்பல்களை இலங்கைக் கொடியின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று கப்பல்களைப் பதிவு செய்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த முழுமையான விபரங்கள் எமது இணையத்தளத்திற்கு கிடைத்துள்ளன.
யுத்ததிற்கு எவ்வித வெளிநாட்டு உதவியும் கிடைக்கவில்லையெனக் கூறும் ராஜபக்ஷர்களுக்கு வழங்கும் ஆதரங்களுடனான பதில்!
2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து அரசாங்கம் பெற்ற வெற்றிக்கு, எந்தவொரு உலக நாடும் உதவி செய்யவில்லையென ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
ஈரானுக்குச் சொந்தமான நான்கு கப்பல்கள் இலங்கைக் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன
ஈரான் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஈரானுக்குச் சொந்தமான நான்கு வணிகக் கப்பல்கள், இலங்கை தேசியக் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மகிந்தவின் நீண்ட ஆயுளுக்காக ''மனித பலி'' கொடுக்கத் திட்டம்!
மகிந்த ராஜபக்ஷவிற்கு இருக்கும் கண்டத்திற்கு பிராய்ச்சித்தம் செய்வதற்காகவும், ஏற்பட்ட நோய்யை சுகப்படுத்துவதற்கும் 'மனித பலி'' கொடுக்க தயாராகி வருவதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
துமிந்தவிற்கு விடுமுறை வழங்குவதற்கு ஶ்ரீ.ல.சு.கட்சி உறுப்பினர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு!
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து தற்போது சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்றுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு மேலும் மூன்று மாதகாலம் நாடாளுமன்ற விடுமுறை வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை சட்டவிரோதமானது என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரச நிர்வாக சேவையில் அரசியல் நியமனம்! சட்டத்திற்குப் புறம்பானத்தை சட்டரீதியாக்க விசேட செயல்திட்டம்!
சிரேஷ்ட அமைச்சர் ஒருவரது உறவினர் ஒருவரும், நிதியமைச்சின் உயர் அதிகாரியொருவரது மகள் ஒருவரும் அரச நிர்வாக சேவையில் இணைத்துக் கொள்வதற்கு முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
13+ மூலம் தீர்வை வழங்குவதாக மகிந்த மீண்டும் மன்மோகன் சிங்கிற்கு வாக்குறுதி

வடக்கு கிழக்குப் பிரதேசத்திற்கு தீர்வாக 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் சென்ற தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் உறுதியளித்துள்ளார்.
புலிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட பணத்தை நாட்டிலிருந்து வெளியேற்றிய அமைச்சர் ஜொன்ஸ்டன்!
அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ முறையற்றவிதத்தில் சம்பாதித்த கோடிக் கணக்கான பணத்தை சட்டத்திற்குப் புறம்பாக சிங்கப்பூருக்கு எடுத்துச் சென்றுள்ளதாக நிதியமைச்சின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரிந்த துறைமுக மணல் விற்பனையிலும் ஊழல்
கிரிந்த துறைமுகத்தில் ஒன்றுசேரும் மணலை செஸ் வரியின்றி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு நெருக்கமான ஹைய் கோல்ட் ட்ரெடிங் நிறுவனத்திற்கு வழங்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாதாள உலகக் குழு முக்கிய நபரை நிபந்தனையின்றி விடுத்த கோதாபய ராஜபக்ஷ!

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா செல்ல முயற்சித்து கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக் குழுவின் முக்கிய நபரான ''கிங்ஸ்பாக் ரோஹன'' என்ற நபர் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளார்.





