Lanka News Web

அரசியல்

ஒக்ரோபர் ஐ.நா மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இலங்கை தொடர்பாக 3 அறிக்கைகள் சமர்க்கப்படும் நிலை!

  • PDF

இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நா அமைப்பின் பங்கு குறித்து மீளாய்வு செய்யும் பணி ஆரம்பமாகியுள்ளதாக, ஜெனிவாவில் உள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் தகவல் வெளியிட்டுள்ளார்.

வத்தளை, ஹுணுப்பிட்டியில் வர்த்தகர் ஒருவர் இன்று ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார்!

  • PDF

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை நகரசபைக்குட்பட்ட ஹுணுப்பிட்டி, ஆனந்த மாவத்தையைச் சேர்ந்த வர்த்தகரொருவர் நேற்று நண்பகல் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

குமார் மாத்தாயாவை ''போட்டுத் தள்ளுவதற்கான'' உத்தரவு 4 மாதங்களுக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்டுள்ளது

  • PDF

கடத்தப்பட்டுள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் பிரேம்குமார் குணரத்னத்தை கொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் நந்தசேன கோதாபய ராஜபக்‌ஷ நான்கு மாதங்களுக்கு முன்னர் உத்தரவு பிறப்பித்ததாக பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் Lanka News Web இணையத்திற்குத் தெரிவித்தார்.

மகாத்மா காந்தியின் தலை துண்டிப்பு! இந்திய தேசத்தின் மீதான உச்சக்கட்ட தாக்குதல்!

  • PDF

மட்டக்களப்பு நகரில் உள்ள இந்திய தேசத்தின் தேசபிதா மகாத்மா காந்தி சிலையின் தலை துண்டிக்கப்பட்டமை இலங்கை இந்திய தேசத்தின் மீது தொடுத்துள்ள தாக்குதலின் உச்சக்கட்டமே என காந்தியவாதிகள் தெரிவித்துள்ளனர்.

ஜே.வி.பி. கிளர்ச்சிக் குழுத் தலைவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது!

  • PDF

ஜே.வி.பின் கிளர்ச்சிக் குழுத் தலைவர் குமார் குணரத்னம், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன், அந்தப் பிரிவின் பெண் தலைவியான திமுது ஆடிகலவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் யோசனைகளை நடைமுறைப்படுத்த முடியாது! கோதாபய ராஜபக்‌ஷ

  • PDF

நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ள அரசியல் யோசனைகளை நடைமுறைப்படுத்த முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தியகம விளையாட்டரங்கும் மகிந்த ராஜபக்‌ஷ நிதியத்திற்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளது

  • PDF

பொதுமக்களின் பணத்தில் இராணுவத்தை ஈடுபடுத்தி நிர்மாணிக்கப்பட்ட ஹோமாகம - தியகம மகிந்த ராஜபக்‌ஷ விளையாட்டரங்கு தற்போது மகிந்த ராஜபக்‌ஷவின் நிதியத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அபிவிருத்திக்காக ஒதுக்கிய நிதியில் பெரும்பகுதியை திருப்பி அனுப்பிய அமைச்சு!

  • PDF

கைத்தொழில், வர்த்தகத்தொழில்துறை அமைச்சுக்காக 2010ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவை பழிதீர்க்கும் மகிந்த அரசின் மற்றுமொரு படலம் ஆரம்பம்!

  • PDF

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்ததால் இந்தியாவை பழிதீர்க்கும் செயற்பாடுகளை மகிந்த அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

''லங்காநியூஸ்வெப் காரர்கள் CIDஇற்குள் இருக்கின்றனர் - பிடிபட்டால் தொங்கவிடப்படுவர்''

  • PDF

'லங்கா நியூஸ் வெப்' இணையத்திற்கு தகவல்களை வழங்கும் ஒற்றர்கள் சிலர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குள் இருக்கின்றனர். இவர்களில் ஒருவரேனும் சிக்கினால் அவர்களுக்கு அரச காலத்து தண்டனை வழங்கப்படும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஜநாயக்க தெரிவித்துள்ளதாக எமது இணையத்தளத்திற்குத் தெரியவந்துள்ளது.

தேசிய நூதனசாலையில் களவாடப்பட்ட பொருட்கள் 50 லட்ச என மதிப்பிடப்பட்டுள்ளது

  • PDF

கொழும்பு தேசிய நூதனசாலையில் அண்மையில் களவாடப்பட்ட வரலாற்றுச் சின்னங்கள் 50 லட்ச ரூபா என தேசிய மரபுரிமைகள் ஆணையாளர் மதிப்பீடு செய்துள்ளார்.

''EXPO 2012'' மகிந்தவின் இன்னுமொரு வெள்ளை யானை!

  • PDF

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் மார்ச் 28ஆம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட 'EXPO 2012' கண்காட்சி எவ்விதத்தில் பயனற்றுப் போனதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவிக்கின்றது.

புதிய கூட்டணியொன்றைக் கட்டியெழுப்பும் சமல் ராஜபக்‌ஷ!

  • PDF

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய, தற்போது அவையில் அங்கம் வகிக்காத ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து புதிய கூட்டணியொன்றைக் கட்டியெழுப்ப சமல் ராஜபக்‌ஷ நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மகிந்த ராஜபக்‌ஷவை திரைமறைவில் தீட்டித்தீர்க்கும் ஶ்ரீ.சு.கட்சியின் தொழிற்சங்கத் தலைவர்கள்!

  • PDF

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, அவரது குடும்பத்தினர் ஆகியோருடன் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர்கள் முரணான நிலைப்பாட்டில் காணப்படுவதாக தொழிற்சங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லலித் கொதலாவல ஆரம்பிக்கும் 23 புதிய நிறுவனங்கள்!

  • PDF

சொலிங்கோ கூட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தேசமான்ய லலித் கொதலாவல, புதிதாக 23 நிறுவனங்களை தற்போது ஆரம்பித்துள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிறுவனங்கள் இலங்கைக்குள்ளும், இலங்கைக்கு வெளியிலும் நிறுவப்பட்டுள்ளன.

இலங்கை காப்புறுதிச் சபையின் தலைவருக்கு மாதாந்தம் வழங்கப்படும் லஞ்சத் தொகை தெரியுமா?

  • PDF

இலங்கை காப்புறுதிச் சபையின் தலைவராக பணியாற்றும் இந்திராணி சுகததாஸவிற்கு செலிங்கோ காப்புறுதி நிறுவனத்தினால் மாதாந்தம் ஐந்து மில்லியன் ரூபா பணம் லஞ்சமாக வழங்கப்படுவதாக அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பங்குச் சந்தை வீழ்ச்சியால் முழுமையான சம்பளத்தை இழந்துள்ள ''softlogic'' ஊழியர்கள்

  • PDF

கொழும்பு பங்குச் சந்தை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் ''softlogic'' நிறுவனத்தின் ஊழியர்கள் தற்போது முழுமையான சம்பளத்தை இழக்கும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக Lanka News Web இணையத்திற்குத் தெரியவந்துள்ளது.

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதா? முகாபே ஆவதா? ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்! மங்கள சமரவீர

  • PDF

இன்று ராஜபக்‌ஷ நிர்வாகம் ஒரு தீர்மானமிக்க ஒரு இடத்திற்கு வந்து நிற்கின்றது. ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதா அல்லது வழமையான பாதையில் தொடர்ந்து பயணித்து ஏகாதிபத்திய நாடாக இலங்கையை உருவாக்குவதா என்ற தீர்மானத்தை அரசாங்கம் இன்று எடுக்க நேரிட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

தமிழ் - சிங்களப் புத்தாண்டின் பின்னர் மகிந்த அமைச்சரவையில் மாற்றம்!

  • PDF

தமிழ் - சிங்களப் புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் சோதிடரும், தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளர்களில் ஒருவருமான சுமணதாஸ இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலக அதிகாரிகள் சிலருடன் சுமனதாஸ இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஊடகப்போரின் ஆரம்பம்! சர்வதேச ஊடகங்கள் நாட்டுக்குள் உட்பிரவேசிக்கத் தடை!!

  • PDF

இலங்கை அரசு மனித உரிமை மீறல்கள் தமிழ் மக்களின் உரிமை மறுப்பு சார்ந்த விடயங்களின் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீள வழிதெரியாது தவித்து வரும் நிலையில் ஊடகங்கள் மற்றும் உதவி நிறுவனங்கள் மீதான அடக்குமுறையை ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகின்றது.

யுத்தத்தில் கணவனைப் பலிகொடுத்த பெண்களை சிதைக்கத் துடிக்கும் இராணுவச் சிப்பாய்கள்!

  • PDF

வடக்குப் பிரதேசத்தில் பெண்கள் தனிமையில் தங்கியிருக்கும் வீடுகளுள் அத்துமீறிப் நுழையும் இராணுவத்தினரின் தொல்லை அதிகரித்திருப்பதாக பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். நேற்று முன்தினம் இரவும் அப்பகுதியில் இத்தகைய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வடக்கில் அரசாங்கம் இராணுவ நிர்வாகத்தை உருவாக்கியிருக்கிறது - அநுரகுமார திஸாநாயக்க

  • PDF

ஓமந்தை முதல் யாழ்ப்பாணம் வரையில் 22 இராணுவ முகாம்களை அமைத்து அரசாங்கம் வடக்கில் இராணுவ நிர்வாகத்தையே உருவாக்கியுள்ளதாக ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 கொலையாளிகளை விடுவித்துக்கொள்ள முயற்சிக்கும் அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க!

  • PDF

1988 - 89ஆம் ஆண்டு காலப் பகுதியில் 11 பேரை சுட்டுக் கொன்றச் சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐவரை அந்தத் தண்டனையிலிருந்து உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க காப்பாற்றியுள்ளார்.

இலங்கை வங்கித் தலைவரை பதவி விலகுமாறு தொலைநகல் உத்தரவு!

  • PDF

இலங்கை வங்கித் தலைவர் பதவியிலிருந்து காமினி விக்ரமசிங்கவை உடனடியாக விலகுமாறு ஜனாதிபதியின் செயலகம் நேற்று (03) தொலைநகல் (ஃபெக்ஸ்) மூலம் உத்தரவிட்டுள்ளது.

தயான் ஜயதிலக்க CIA உளவாளி - ஷேனுகா

  • PDF

பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க அமெரிக்காவின் CIA புலனாய்வுப் பிரிவின் உளவாளி என இலங்கை வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஷேனுகா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆயுதப் பயிற்சிப் பெற்ற சிலர் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதாக திவயின வெளியிட்ட செய்தி பொய்யானது! இந்தியா

  • PDF

இந்தியாவின் மூன்று இரகசிய முகாம்களில் பயிற்சி பெற்ற சுமார் 150 பேர் இலங்கைக்குள் உட்பிரவேசித்துள்ளதாக உபாலி நிறுவனத்திற்குச் சொந்தமான திவயின பத்திரிகை நேற்று (02) வெளியிட்ட செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேர்வின் சில்வாவின் சகாவைப் பின்தொடரும் கோதாபயவின் வெள்ளை வேன் கும்பல்!

  • PDF

மக்கள் தொடர்புதுறை அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளரான உபுல் விஜேசூரிய என்ற நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ, அவரது இணைப்பு அதிகாரியான ''எயார்ஃபோஸ்'' நிஷாந்தவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

மற்றுமொரு அமைச்சின் செயலாளரின் ஊழல் மோசடிகளும் வெளிப்பட்டது!

  • PDF

கலை, கலாசார அமைச்சின் செயலாளர் விமல் ரூபசிங்கவின் கேள்விமனுக் கோரல் ஊழல் மோசடி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஜீ.எல்.பீரிஸ் CIA உளவாளி - எல்லே தேரர்

  • PDF

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் (CIA) இலங்கைக்கான உளவாளி என எல்லே தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவை தகாத வார்த்தைகளினால் திட்டித்தீர்த்த மகிந்த ராஜபக்‌ஷ!

  • PDF

வெள்ளை வேனில் கடத்தப்பட்ட தன்னை, ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரே விடுவித்ததாக அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவின் மைத்துனரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சேனாரத்ன திவயின சிங்களப் பத்திரிகைக்கு செவ்வியொன்றை வழங்கியுள்ளார்.

மேலதிகக் ஆக்கங்கள்...