Lanka News Web

அரசியல்

மகிந்தவின் ஜாதகத்தில் கோளாறு! இரகசியமாக நாடு முழுவதும் பரிகாரப் பூஜை நடத்தப்படுகிறது!!

  • PDF

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தற்போது எதிர்நோக்கியுள்ள கிரக பலன் அவருக்குச் சாதகமாக இல்லாமையினால், இதற்கு நாடு முழுவதும் பரிகாரப் பூஜை நடத்த ஏற்பாடாகியுள்ளது.

அமைச்சர் ஜொன்ஸ்டனை நேரடியாக விமர்சித்த ஆளும் கட்சி உறுப்பினர்கள்

  • PDF

நெல் அறுவடைச் செய்யப்பட்டு வரும் தற்போதைய நிலையில், நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான உரிய செயல்திட்டம் இதுவரை தயாரிக்கப்படவில்லையென ஆளும் தரப்பு உறுப்பினர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

இலங்கைக்கு ஆதரவு வழங்கினால் தெரிவித்தால் மலேயசியத் தமிழர்களின் வாக்குகளை இழக்க நேரிடும் ! மலேசிய அரசுக்கு எச்சரிக்கை மணி

  • PDF

ஐ.நா மனித உரிமைச் சபையில், இலங்கைக்கு மலேசியா ஆதரவு தெரிவிக்குமெனில், ஆட்சியில் இருக்கும் அரசாங்கமானது, வரும் தேர்தலில் மலேசியத் தமிழர்களின் வாக்குகளை இழக்க நேரிடுமென மலேசிய ஊடகமொன்று எச்சரித்துள்ளது.

ஐ.நா கூட்டத் தொடர் : இராஜதந்திரச் செயற்பாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!!

  • PDF

ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்தி, தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்ட, தொடர் இராஜதந்திரச் செயற்பாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக நா.தஅரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் இந்தியாவின் நிலைப்பாடு மாறக்கோரி சென்னையில் பேரணி/பொதுக்கூட்டம்

  • PDF

இலங்கை அரசை இந்தியா ஆதரிக்க கூடாது . இலங்கையை ஐ நா சபை மனித உரிமை கூட்டத் தொடரில் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு போராட்டம் சென்னையில் நடந்தது.

இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் – மார்கரட் செகாக்யா

  • PDF

இலங்கையில் மனிதஉரிமை பாதுகாவலர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகவும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் செகக்யா தெரிவித்துள்ளார்.

கேளிக்கை விடுதியில் பணத்தைத் தொலைத்த சிங்கள ஊடகவியலாளர்கள், புலிகள் பறித்துக் கொண்டதாக கூறியுள்ளனர்!

  • PDF

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேணை குறித்து இலங்கை மக்களைத் தெளிவுபடுத்துவதற்கெனக் கூறி ஊடகவியலாளர் குழுவொன்றை இலங்கை அரசாங்கம் ஜெனீவாவிற்கு அனுப்பி வைத்தது.

பொன்சேக்காவின் ஆதரவாளர் அலகியவன்னைவக் கைதுசெய்ய முனைப்பு

  • PDF

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை விடுவித்துக் கொள்ளும் போராட்டத்தில் இணைப்பாளராக முன்னர் செயல்பட்ட குமார அலகியவன்னவை கைதுசெய்வதற்கு முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதியிடம் திட்டுவாங்கிய பீரிஸிற்கு வயிற்றோட்டம்!

  • PDF

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தகாத வார்த்தைகளினால் திட்டித் தீர்த்ததால் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. இதன்போது அருகில் இருந்த டக்ளஸ் தேவானந்தா பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் ஜீ.எல்.பீரிஸை விடுதிக்கு அழைத்துச் சென்றதாக ஜெனீவாவிற்கான இலங்கைக் குழுவிற்கு தலைமை வகிக்கும் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சமரசிங்கவிற்குப் பதிலாக தமரா உரையாற்றியிருந்தால் இவ்வளவு நெருக்கடி இருந்திருக்காது - மகிந்த

  • PDF

ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை சார்பாக அமைச்சர் மகிந்த சமரசிங்கவிற்குப் பதிலாக தமரா குணநாயகம் உரையாற்றியிருந்தால் இலங்கைக்கு இன்னும் சாதகமான நிலை ஏற்பட்டிருக்கும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்ததாக அரசாங்கத்திலுள்ள சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு பணிப் பெண்களுக்கான காப்புறுதித் திட்டத்திலிருந்து அமைச்சருக்குத் தரகுப் பங்கு!

  • PDF

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்களாக பணிபுரியம் இலங்கையர்களை காப்புறுதி செய்யும் பொறுப்பு தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைச் சபையின் 2ஆம் வாரத்தில் பேசப்பட்ட இலங்கை விவகாரம்!

  • PDF

ஐ.நா மனித உரிமைச் சபையிக் கூட்டத் தொடரின் இரண்டாவது வார அமர்வின் தொடக்க நாளான நேற்று திங்கட்கிழமை, சிறிலங்கா தொடர்பில் இரண்டு உரைகள் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ளதென கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நீதி கேட்டு நடைபயணம் மேற்கொண்ட மூவர் நவம்பிள்ளையிடம் மகஜரைக் கையளித்தனர்!

  • PDF

ஐ.நா சபையிடம் ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக நீதிக்கான நடைப்பயணம் மேற்கொண்ட மூவரும் நேற்று முற்பகல் 11 மணியளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்தித்து தாம் நடந்து வந்த நோக்கத்தை கூறி, ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினைக் கையளித்தனர்.

பாடசாலை மாணவி கொலைக் குற்றவாளி விளக்கமறியலில்! விடுவித்துக் கொள்ள டக்ளஸ் கடும் பிரயத்தனம்!!

  • PDF

நெடுந்தீவில் பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஈ.பி.டி.பி உறுப்பினர் கிருபா என்பவர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் 20 பேர் காணாமல் போயுள்ளனர்

  • PDF

நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டு தற்போது மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் இந்தக் காலப்பகுதியில் 20 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.

பொய் வாக்குமூலத்தை வழங்குமாறு அநுராதபுரம் சிறைக்கைதிகளுக்கு அழுத்தம்

  • PDF

''நாம் இலங்கையர்' அமைப்பிற்கு எதிராக வாக்குமூலம் வழங்குமாறு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் அழுத்தம் கொடுத்துள்னர்.

அமெரிக்க இராணுவத்துடன் இலங்கை இராணுவம் விசேட ஒப்பந்தத்தில் கைச்சாத்து?

  • PDF

அமெரிக்க ஆக்கிரமிப்பு தலைதூக்கி வருவதாக அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச ஆகியோர் அமெரிக்காவிற்கு எதிராக பொதுமக்களிடம் கருத்துக்களைப் பரப்பி வருகின்ற போதிலும், இரகசிய ஒப்பந்தமொன்று கையெழுத்தாகியுள்ளதாக தெரியவருகிறது.

நோர்வே அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்‌ஷ!

  • PDF

சர்வதேச ரீதியாக எழுந்துள்ள அழுத்தங்களை எவ்வாறு இராஜதந்திர ரீதியாக சமாளிப்பது என நோர்வே அரசாங்கம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

மீண்டும் தரக்குறைவான பெட்ரோல்!

  • PDF

மீண்டும் இலங்கைச் சந்தைக்கு தரக்குறைவான எரிபொருள் வரக்கூடிய சாத்தியம் இருப்பதாக எண்ணெய்வளத்துறை அமைச்சின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கு அர்ப்பணி செய்தவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப் பயணம்!

  • PDF

அநுராதபுரத்தில் நடத்தப்பட்ட தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கு முழு ஆதரவை வழங்கிய வட மத்திய மாகாண உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் இல்லாமல் சமாதானத்தைக் காண முடியாது - மரியா ஒட்டேரோ

  • PDF

இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் நிலைத்த சமாதானத்தை காணமுடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்க அரசுத்துறை செயலாளர் மரியா ஒட்டேரோ தெரிவித்தார்.

ஜெனிவாவுடன் இணைந்து பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை முன்வர வேண்டும்! நவம்பிள்ளை அழைப்பு

  • PDF

சிறிலங்கா பற்றிய அறிக்கைகளுக்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை பதிலளிக்கும் என்று தாம் நம்புவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்திடம் நீதி கேட்க புலம்பெயர் சமுகம் ஒன்றாய்த் திரண்டு வாரீர்!

  • PDF

நிரந்தர விடிவிற்காகவும் நிம்மதியான வாழ்விற்காகவும் ஏங்கித் தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கு சர்வதேச சமூகம் நீதியான தீர்வு ஒன்றினைப் பெற்றுத்தர வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் ஜெனீவாவை அண்மிக்க என்னும் 35 கிலோமீற்றர் தூரங்களே உள்ளது.

அரசாங்கத்தின் வாக்குறுதி குறித்து நம்பிக்கையில்லை –சர்வதேச மன்னிப்புச் சபை

  • PDF

அரசாங்கத்தின் வாக்குறுதிகள் தொடர்பில் நம்பிக்கை கிடையாது எனசர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.

சிக்குமா ஶ்ரீலங்கா? நவநீதம்பிள்ளை இன்று முக்கிய உரை?

  • PDF

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மனித உரிமைகள் நிலை குறித்த பேரவையின் ஆண்டு அறிக்கையை இன்று சமர்ப்பிக்கவுள்ளதாக தெரியவருகிறது.

TNA ஜெனிவா வராததன் மூலம் அரசின் போக்கு சரியானதென நிரூபணம் என்கிறார் அமைச்சர் சமரசிங்க

  • PDF

ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் பங்கெடுக்காமல் இருப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவினால் இலங்கை அரசாங்கம் சரியான சரியான போக்கில் செயற்படுகின்றது என்பது நிரூபணமாகியுள்ளது என மனித உரிமைகள் விவகாரங்களுக்கான குறித்த ஜனாதிபதியின் தூதுவரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானம் நிறைவேறியது! அடுத்து சிறிலங்காவா?

  • PDF

நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் சிரியா விவகாரம் முக்கிய விடயமாக விவாதிக்கப்பட்டு வந்தநிலையில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற அமர்வின் போது சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானமொன்று சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், 47 ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு எழுதியுள்ள கடிதம்

  • PDF

மனித உரிமை சபையின் 19வது மாநாடு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து அதில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுக்கும் கடிதமொன்றினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் அனுப்பியுள்ளார்.

இந்தியாவுடனான இறுதி லீக் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக என விசாரணை நடத்த மகிந்த ராஜபக்‌ஷ முனைப்பு!

  • PDF

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மும்முனைக் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அதிர்ச்சித் தோல்வியடைந்ததால் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ ஆத்திரமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

அமைச்சர் சந்திரசேனவின் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

  • PDF

இந்நாட்களில் மிகவும் ஆத்திரமடைந்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, அவரது நெருக்கிய சகாவான அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன குறித்த ஊழல் மோசடி விபரங்களை தனியார் பத்திரிகை ஊடாக வெளியிடுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ சில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலதிகக் ஆக்கங்கள்...