Lanka News Web

அரசியல்

காவுகொள்ளப்பட்ட மற்றுமொரு தமிழ் அரசியல் கைதி!

  • PDF

வவுனியா சிறைச்சாலையில் இருந்து கடந்த மாதம் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டு பின்னர் அங்கு வைத்து சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி உயிரிழந்துள்ளார்.

வடக்குத் தமிழர் இருவரை தேசியப் பட்டியலில் நியமிக்க கோதாபய முயற்சி

  • PDF

ஆளும் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் பதவி வழங்கப்பட்ட இருவரை நீக்கிவிட்டு வடக்கில் இரண்டு தமிழர்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவர வாய்ப்பளிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பதவி விலகப் போவதில்லை என்கிறார் NSB தலைவர்!

  • PDF

தான் எவ்வித தவறும் செய்யாததால் பதவி விலகப் போவதில்லை என தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நிதிச் செயலாளரும், பொலிஸ்மா அதிபரும் மன உலைச்சலில்!

  • PDF

தத்தமது பணிகளில் அரசியல் தலையீடுகள் தொடர்ந்தால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாது என நிதியமைச்சின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவும், பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்கக்கோனும் தெரிவித்துள்ளனர்.

NSB கொள்ளையின் சூத்திரதாரி 'பொருளாதார கொலையாளி'' அஜிட் நிவாட் கப்ரால்!

  • PDF


'த ஃபினான்ஸ்' நிறுவனத்தின் பங்குகளை பெறுமதியை அதிகரித்துக் காண்பித்து அதனை தேசிய சேமிப்பு வங்கியினால் கொள்வனவு செய்யவைத்த மோசடியின் சூத்திரதாரி மத்திய வங்கியின் ஆளுநரும், பொருளாதார கொலையாளியுமான

அமைச்சர் மேர்வின் சில்வாவின் காணி கொள்ளை குறித்த தகவலொன்று வெளியானது

  • PDF

போலியான ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொட நகர மத்தியிலுள்ள 85 பேர்ச் காணியொன்றை அமைச்சர் மேர்வின் சில்வா கொள்ளைசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலையாளிக்கு ஆளும் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவி!

  • PDF

போதைப்பொருள் விசேட தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டக்ளஸ் நிமல், அவரது மனைவி ஆகியோர் கொலை செய்யப்பட்டதற்கு பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவே பொறுப்பு என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய உற்பத்தியை அதிகரிப்பதாகக் கூறி சீனாவிலிருந்து மீன் இறக்குமதி!

  • PDF

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவினால் காலியில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட டின் மீன் உற்பத்தி மையத்திற்கு, சீனாவிலிருந்து மீன்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புதையல் கொள்ளையின் பின்னணியில் இயங்கும் தொல்லியல்துறை சிரேஷ் அதிகாரி!

  • PDF

இலங்கையின் புரதான இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் புதையல் கொள்ளையின் பின்னணியில் தொல்லியல் சிரேஷ்ட அதிகாரியொருவர் செயல்பட்டுள்ளதாக இரகசியப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குச் சென்ற இரண்டு இளைஞர் காணாமல் போயுள்ளனர்

  • PDF

கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குச் சென்ற இளைஞர் இருவர் காணாமல் போயுள்ளனர்.

மகிந்தவின் பாதுகாப்புப் படைமுகாமிலுள்ள சிப்பாய்கள் மக்களிடம் கொள்ளையிட்டு வருகின்றனர்

  • PDF

ஹம்பாந்தோட்டை, தங்காலை, மெதகம பிரதேசத்திலுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிலுள்ள சிப்பாய்கள் சிலர் கொள்ளை உள்ளிட் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'துமிந்தவிற்கு மேலும் சத்திர சிகிச்சை'என்பது மகிந்தவின் திட்டமிட்ட பிரசாரம்!

  • PDF

கொழும்பு - கொலன்னாவயில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்போது சிங்கப்பூர் மௌன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

திலங்கவிற்கு பிரதியமைச்சுப் பதவியொன்று வழங்குமாறு பசில் அழுத்தம்

  • PDF

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதியமைச்சுப் பதவி வழங்கும் சந்தர்ப்பத்தில் திலங்க சுமதிபாலவிற்கும் பிரதியமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

செய்மதி ஊடாக ஜனாதிபதிக்கு பூசை

  • PDF

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அண்மையில் கொரியா சென்றிருந்தபோது, அவருக்கு பெரிய கண்டம் இருப்பதாகக் கூறி போலியகொட வித்யாலங்கார விகாராதிபதி வெலிமிட்டியாவே குசலதம்ம தேரர், சிங்கள சமியார் ஒருவரை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் சென்று விசேட பூசையொன்றை நடத்தியுள்ளார்.

புதையல் கண்டுபிடிக்க லேசர் ஆயுதங்களை விநியோகித்துள்ள கோதாபய ராஜபக்‌ஷ!

  • PDF

பூமியை மிகவும் துல்லியமாக கண்காணிக்கக் கூடிய லேசர் தொழில்நுட்ப ஆயுதங்கள் சிலவற்றை பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ, அவரது நெருங்கிய சகாவான விசேட அதிரடிப்படையின் மேஜர் கொடமுன்னவிடம் கையளித்துள்ளதாக தெரியவருகிறது.

தென்னாபிரிக்காவை மீண்டும் நழுவவிட்டது இலங்கை

  • PDF

தென்னாபிரிக்காவுடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்குக் கிடைத்த மற்றுமொரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இலங்கையின் இராஜதந்திரம் தற்கொலை செய்து கொண்டது: ஜயந்த தனபால

  • PDF

கடந்த மார்ச் 22 ஆம் திகதி, தற்கொலை மூலம் ‘இலங்கை தமது இராஜதந்திரத்தை மாய்த்துக்கொண்ட நாள்’ என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம்

  • PDF

வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கனடாவில் தமிழ் இளையோர் அமைப்பின் "மீள் எழுச்சி நாள்" மே 19 நாள்

  • PDF

தமிழ் இன அழிப்பின் உச்சக் கட்டமாகிய முள்ளிவாய்க்கால் அவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவினை முன்னிட்டு, கனடிய மாணவர் சமூகம் இணைந்து முன்னெடுக்கும் 'மீள் எழுச்சி நாள்' நினைவு நிகழ்வு

NSB பரிவர்த்தனை ஊடாக பிரதம நீதியரசருக்கு வலை வீசும் மகிந்த ராஜபக்‌ஷ!

  • PDF

தேசிய சேமிப்பு வங்கி 'த பினான்ஸ்' நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்ததை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அறிந்திருக்கவில்லை என்பதை ஒப்புவிக்க ஜனாதிபதிக்கு நெருக்கமான சில தனியார் ஊடகங்கள் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

கோதாபயவினால் பாதிக்கப்பட்ட ஆளும் தரப்பில் சிலர் அமைச்சர் பசிலுடன் இணைந்துகொண்டனர்

  • PDF

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவினால் புறந்தள்ளப்பட்டுவரும் ஆளும் தரப்பிலுள்ள சில அமைச்சர்கள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவிற்கு நெருக்கமாகியுள்ளனர்.

மே தினப் பேரணியில் கோதாபய, திலங்க ஆதரவாளர்களிடையே மோதல்

  • PDF

ஆளும் தரப்பு மே தினப் பேரணியில் பசில் ராஜபக்‌ஷவிற்கு ஆதரவான திலங்க சுமதிபால ஆதரவாளர்களுக்கும், மே தின ஏற்பாடுகளுக்குப் பொறுப்பாகவிருந்த கோதாபய ராஜபக்‌ஷவின் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

தேசத்திற்கு மகுடம் என்ற போர்வையில் புதையல் கொள்ளை

  • PDF

பொதுமக்களின் பணத்தை வீண்விரையம் செய்து நடத்தப்படும் ''தேசத்திற்கு மகுடம்'' கண்காட்சியின் திரைமறைவில் அரசாங்கம் புதையல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.

ஒடுக்கப்படுவோருக்கு குரல்கொடுத்த இராமகிருஷ்ண படையாட்சி

  • PDF

தென்னாபிரிக்காவின் பொதுத்துறை மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராதாகிருஷ்ண படையாச்சி, மாரடைப்பால் காலமானார்.

மகிந்தவின் கையெழுத்துடன் அரசாங்க காணி தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது

  • PDF

பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் தம்புள்ளையில் உள்ள 41.23 பேர்சர்ஸ் காணியை ஓய்வு விடுதி ஒன்று அமைப்பதற்காக கொலன்னாவையில் உள்ள நபருக்கு வழங்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்‌ஷவின் உத்தரவின்பேரிலேயே இந்த காணி வழங்கப்படுகிறது.

தொழிலாளர் அடக்குமுறைக்கு தயாராகும் மகிந்த அரசாங்கம்

  • PDF

தொழிலாளர் உரிமைகளை செயலிழக்கச் செய்ய புதிய சட்டம் ஒன்றை அமுல்படுத்த மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமைச்சரவை மாற்றம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

  • PDF

இம்மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்படவிருந்த அமைச்சரவை மாற்றம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ஒருபோதும் 13 அரசியலலைப்பை நடைமுறைப்படுத்தப் போவதில்லையாம்!

  • PDF

வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஷேனுகா சேனவிரத்ன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறித்து பல குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாக இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் எம்மிடம் தெரிவித்தார்.

த ஃபினான்ஸ் பங்குகளைக் கொள்வனவு செய்த சேமிப்பு வங்கிக்கு ஒரே நாளில் 15 கோடி ரூபா நட்டம்

  • PDF

இலங்கை நிதி நிறுவனங்களில் சர்ச்சையில் சிக்கிய த ஃபினான்ஸ்'' பங்குகளைக் கொள்வனவு செய்ததன் மூலம் தேசிய சேமிப்பு வழங்கிக்கு ஒரு நாளில் மாத்திரம் 15 கோடியே 28 லட்சத்து 63 ஆயிரத்து 757 ரூபா நட்டம் (152,863,757.00) ஏற்பட்டுள்ளது.

முள்ளி வாய்க்கால் இன அழிப்பின் 3ஆம் ஆண்டு நினைவு கூரல்

  • PDF

ஈழத்தமிழ் மக்கள் இறையாண்மையுடன் சுதந்திரமாக அவர்களுடைய பூர்வீக பூமியாகிய வடக்குகிழக்கில் வாழ்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு ஜனநாயக அமைப்பாகவும், பிரித்தானிய அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு செயற்படும் அமைப்பாகவும், பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த 2006 இல் இருந்து செயற்பட்டு வருகின்றது.

மேலதிகக் ஆக்கங்கள்...