இலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனமான ஹோல்சிம் நிறுவனத்தில் 858 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊழல்
ஹோல்சிம் நிறுவனத்தில் 858 மில்லியன் ரூபா மாயமாகியுள்ளது
தபால் முத்திரைகள் மூலம் பலகோடி ரூபா மோசடி
தபால் மற்றும் வருமான முத்திரைகளை வெளியிடும் கொள்கைக்கு முரணாக தபால், தொலைத் தொடர்புகள் அமைச்சு முத்திரை ஒன்றை அச்சிட அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
2,000 ஏக்கர் அரச காணியை ஷிராந்தி ராஜபக்ஷ தனக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்கியுள்ளார்
ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, தனது மருமகன்களில் ஒருவரான டில்ஷான் விக்ரமசிங்கவுக்கு திருகோணமலையில், 2 ஆயிரம் ஏக்கர் காணி ஒன்றை வழங்கியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி திட்டங்களுக்குத் தருவிக்கப்படும் உபகரணங்களின் ஊடாக பசில் ராஜபக்ஷவிற்கு பாரிய தரகுப் பணம் சென்றடைகிறது
இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிரத்தித் திட்டங்களுக்காக தருவிக்கப்படும் இயந்திர உபகணங்களின் ஊடாகவே இந்தத் தரகுப் பணம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சென்றடைவதாக அந்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.
முன் அறிவித்தலின்றி சம்பளத்தில் 2 கோடி ரூபா வசூலிக்கப்பட்டுள்ளதாக கனிஷ்ட பொலிஸ் உத்தியோத்தர்கள் முறைப்பாடு
எவ்வித முன் அனுமதியுமின்றி பொலிஸாரின் சங்கம் எனப்படும் சங்கத்திற்கு இரண்டு கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணை நடத்தி, இதனுடன் தொடர்புபட்ட அனைத்து அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வெண்டும் என கனிஷ்ட பொலிஸ் உத்தியோத்தர்கள் லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
'கெதிக்' நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட காணி நாமல் ராஜபக்ஷவின் சகாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது
இலங்கை இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள காலி முகத்திடலுக்கு அண்மித்த சுமார் 07 ஏக்கர் காணி, சீனாவின் 'கெதிக்' நிறுவனத்திற்கு வழங்குவதங்கு அரசாங்கம் முன்னர் தீர்மானித்திருந்தது.
மகிந்தவின் அந்தரங்க இணைப்பாளர் சஜின்வாஸ் இரண்டு ஹெலிகொப்டர்களைக் கொள்வனவு செய்துள்ளார்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரகசிய செயற்பாடுகளின இணைப்பாளரும், வெளிவிவகார அமைச்சின் மேற்பார்வையாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின்வாஸ் குணவரத்ன இரண்டு ஹெலிகொப்டர்களைக் கொள்வனவு செய்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் போட்டிகளின் உரிமத்தை யோசித்த ராஜபக்ஷவின் கார்லன்ட் ஸ்போட்ஸ் பெற்றுக்கொண்டுள்ளது
இலங்கை - பாகிஸ்தான், இலங்கை தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி ஒளிபரப்பு உரிமத்தை ஜனாதிபதியின் இளைய புதல்வர் யோசித்த ராஜபக்ஷவிற்குச் சொந்தமான கார்லன்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேவைப் பெற்றுக்கொண்டுள்ளது.
மகாவலி - லக்ஸபான மின் உற்பத்தி நிலைய புனரமைப்பு என்ற பேரிலும் கோடிக்கணக்கில் மோசடி
மகாவலி, லக்ஸபான நீர் மின் உற்பத்தி நிலையங்களைப் புனரமைப்பதாகக் கூறி பல கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
வடக்கில் கைவிடப்பட்ட வாகனங்களின் என்ஜின்கள் காணாமல் போயுள்ளன
யுத்த காலத்தில் பொதுமக்களினால் கைவிடப்பட்ட வாகனங்களின் என்ஜின்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிவேக வீதியின் ஒரு கிலோ மீற்றர் நிர்மாணத்திற்கு 6 கோடி ரூபா
தெற்கு அதிவேக வீதியின் ஒரு கிலோ மீற்றர் தூரத்தை நியமிக்க 6 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. 1995 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த வீதி 126 கிலோ மீற்றர் தூரம் வரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் கொட்டாவ பிரதேசத்தில் இருந்து காலி பிந்து வரையான தூரம் 100 கிலோ மீற்றராகும்.
துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் விரைவில் கைதாகும் நிலை
இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பந்துவிக்ரமமுனி மற்றும் அதன் பணிப்பாளர் பிரசன்ன களுதரகே ஆகியோருக்கிடையிலான முரண்பாடுகள் மோசமடைந்துள்ளன.
சதொச நிறுவனத்தின் கொள்வனவு பொறுப்புக்கள் அமைச்சர் ஜொன்ஸ்டனின் சகாக்களிடம்!
இலங்கை சதொச நிறுவனத்தினால் இதுவரை போட்டி விலைகளின் அடிப்படையில் இறக்குமதி செய்த அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யவும் அதனை விற்பனை செய்யும் பொறுப்பையும் வர்த்தக அமைச்சு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது.
வெளிநாடுகளுக்கு காணிகளை விற்பதில் நாமல் - பசில் ஆகியோருக்கிடையே பனிப்போர்
இராணுவத் தலைமையகத்திற்குச் சொந்தமான 32 இரண்டு ஏக்கர் காணியை தத்தமது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஷவிற்கும், ஜனாதிபதியின் சகோதரரான அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் மீண்டும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதால் மிலிந்த யோக்கியன் - அரசின் இரட்டை நிலைப்பாடு
முன்னர் திருடன் மோசடிக் காரன் என கூறப்பட்ட மிலிந்த மொரகொட தற்போது நகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடுவதால் அது அரசாங்கத்திற்கு வலுசேர்த்திருப்பதாகக் கூறி சில அமைச்சர்கள் அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.





