முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத இன்னும் சில ஆதாரங்களும் வெளிவந்துள்ளன.
போர்களத்தில் நின்ற காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்களுக்கான சாட்சிகள் இவை.
விடுதலைக்கு தங்களை கொடையாக்கிய புலிப் போராளிகளின் வரலாறு உலகறிந்த விடயம். விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளை குறிப்பாக இசைப்பிரியா மற்றும் இன்னொரு பெண்ணையும் சுட்டு விட்டு அவர்களின் மார்பகங்களில் முல்லால் குத்தி சப்பாத்துக் கால்களால் மிதித்து அவமதிக்கும் கொடூரமே இவை.
காயமடைந்தவர்களை மருத்துவமனையில் வைத்தே எரித்துக்கொன்ற கொடூரம். பாதுகாப்புத்தேடி பாரஊர்திகளுக்கு கீழ் பதுங்கியவர்களை, அதன் கீழேயே எரிக்கப்பட்ட கொடுமை. உழவு இயந்திதரத்தோடு சேர்த்தே உயிர்கள் வதைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்ட கொடுமை ஆகியவற்றின் ஆதாரங்களே இவை.







