இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் அயர்லாந்து பிரதமர் மேரி ரொபின்சன் கோரியுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்புவிசாரணை நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனிதத்திற்கு எதிராக இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட குற்றச்செயல்களை வெறுமனே உதாசீனம் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கம்ஏற்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உதவிகளைவழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் நல்லிணக்கத்தைஏற்படுத்தல் ஆகியன நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த மகிவும் அவசியமானவை என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
மேரி ரொபின்சன் மனித உரிமை மற்றும் சமாதானத்திற்கான முதிய உலகத்தலைவர்கள் அமைப்பில் அங்கம் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.





