Lanka News Web

இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்!- விரேந்திர ஷர்மா

  • PDF

சமாதானம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தின் வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் விவாதம் இடம்பெற்றுள்ளது.

 

இலங்கையின் மனித உரிமை தொடர்பாக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு சிலவேளை பிரித்தானியாவும் ஆதரவு வழங்குவதற்கு சந்தர்ப்பமுள்ளதாக இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட தொழிலாளர் தேசிய கட்சியின் உறுப்பினர் விரேந்திர ஷர்மா இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என தெரிவித்துள்ளார்.

மனித உரிமை தொடர்பில் முன்னின்று செயற்பட்ட பல்வேறு அமைப்புக்களும் இலங்கை தொடர்பாக நியமிக்கப்பட்ட ஐ.நா நிபுணர் குழுவும் சர்வதேச மட்டத்தில் இலங்கை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012 16:43 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது