Lanka News Web

18 ஆவது நாளாகத் தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம்!

  • PDF

உலகத் தமிழர்களின் ஒருமித்த குரலாக சர்வதேசத்திடம் நீதிகேட்கும் "நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம்" இன்று 600 கி.மீ தூரத்தைக் கடந்துள்ளது.

கடந்த மாதம் 28 ஆம் திகதி லண்டனிலிருந்து ஆரம்பமான இந்த மனிதநேய நடைபயணம் 18 ஆவது நாளான இன்று 600 கி,மீ தூரத்தை கடந்து பிரான்ஸ் நாட்டின் Ravières எனும் நகரை சென்றடைந்துள்ளது.

இன்று காலை (15) Tonnerre எனும் பகுதியில் இருந்து 10:15 மணிக்கு ஆரம்பமான இந்த நடைபயணம் 25.9 கிலோமீற்றர் தூரத்தை கடந்து Ravières எனும் இடத்தை மாலை 6:45 மணிக்கு சென்றடைந்தது. உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் அனைவரது சார்பிலும் தமிழ்ர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு நீதிகேட்டும், தாயகத்தில் தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டுத்தரும்படியும் கோரி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் முதன்நாளான எதிர்வரும் 27.02.2012 திங்கட்கிழமை அன்று ஜெனீவா சென்றடையவுள்ளது.

தமிழர் மீதான சிறலங்கா அரசினது இனப்படுகொலை குறித்தான சுயாதீனா சர்வதேச விசாரணை , தமிழீத்தில மனித உரிமைகளைக் கண்காணிப்பகத்தை ஐ.நா நிறுவவேண்டும், தமிழீழத்தில் பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை இந்த நடைப்பயணம் வலியுறுத்துகின்றது.