Lanka News Web

துண்டுப்பிரசுர விநியோகத்தைக்கூட கண்டு நடுங்கும் அரசாங்கம்!

  • PDF

மக்கள் போராட்ட இயக்கத்தினனர், கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தையில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த போது பாதுகாப்புத் தரப்பினரால் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

துண்டுப் பிரசுரங்களை மக்கள் போராட்ட இயக்க உறுப்பினர்கள் விநியோகிக்க ஆரம்பித்து சில நிமிடங்களில் அங்கு வந்த பொலிஸார் ''அரச விரோத செயற்பாடுகளை இங்கு முன்னெடுக்க முடியாது'' எனத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறும் எச்சரித்துள்ளனர். எனினும், இதனைப் பொருட்படுத்தாத மக்கள் போராட்ட இயக்க உறுப்பினர்கள் தொடர்ந்தும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

இதன்பின்னர் சிறிது நேரத்தில் அங்கு வந்த இராணுத்தினர், துண்டுப் பிரசுரம் விநியோகத்தவர்களை அச்சுறுத்தியதுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.