Lanka News Web

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் திடீரென மீட்கப்பட்ட குண்டுகள்

  • PDF

ஜெனரல் சரத் பொன்சேக்காவை பலவந்தமாக சிறைவைத்து இன்று (08)ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கடைப் பிரதேசத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்திற்கு அண்மித்த பிரதேசத்தில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தைத் தடுக்க பாதுகாப்புத் தரப்பினர் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைய நீதிமன்றக் கட்டிடத் தொகுதிக்கு அருகில் நேற்று (7) முற்பகல் 9 குண்டுகளை பாதுகாப்புத் தரப்பினர் மீட்டு செயலிழக்கச் செய்துள்ளனர்.

இந்த குண்டுகள் மீட்கப்பட்டதை அடிப்படையாக வைத்து இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்த நீதிமன்ற உத்தரவொன்றைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் சட்டமா அதிபர் திணைக்களம் மேறகொண்டு வருகிறது.

இந்தத் திட்டமானது அரசாங்கத்திற்கெதிரான ஆர்ப்பாட்டத்தை மழுங்கடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியென ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுத்துவரும் நிலையில் பாதுகாப்புத் தரப்பினர் ஆங்காங்கே குண்டுகள், குண்டு வதந்திகள், ஆயுத மீட்பு என பல்வேறு கட்டுக்கதைகளை உருவாக்கி வருகின்றனர்.