இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினான்டோ அந்த அலுவலகத்தில் அந்தப்புரமொன்றைப் பராமரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
60 வயதைக் கடந்து அரச பதவியில் நீடித்துவரும் பெர்டினான்டோ மின்வலு, எரிசக்தி அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றுகிறார்.
இலங்கை முதலீட்டுச் சபையின் இளம் பெண்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்குவதாக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளினால் சபையின் அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக முதலீட்டுச் சபையின் உட்தரப்புத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
நிதியமைச்சின் செயலாளர் பி.பீ. ஜயசுதந்திர இதுகுறித்து ஆராய்ந்த போது மேற்கண்ட தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.





