Lanka News Web

கெஹெலிய மகளிடம் மன்னிப்பு கோருமாறு சவேந்திர சில்வாவிற்கு ஜனாதிபதி உத்தரவு

  • PDF

ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகளான சந்துலாவிடம் மன்னிப்புக் கேட்டுக்குமாறு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை பிரதிவதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றி வரும் சந்துலாவை, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த சம்பவம் தொடர்பாக, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி, பேசுவதற்காக ஜனாதிபதியின் அலுவலகத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகளை நேற்று அலரி மாளிகைக்கு அழைத்து உரையாடிய போது, தனது உத்தரவை சவேந்திர சில்வாவுக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த, கெஹெலியவின் மகளும் குறைத்து மதிப்பிடக் கூடியவர் அல்ல எனவும் அவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அமுனுகமவை கூட தனது வலையில் சிக்க வைத்திருந்தவர் எனக் கூறியுள்ளார்.

கெஹெலியவின் மகள் லண்டனில் கழித்த விளையாட்டான வாழ்க்கை பற்றி தனக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ள ஜனாதிபதி, தனது மகன் நாமால் ராஜபக்ஷவை, மிகவும் கஷ்டப்பட்டு, காப்பறிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் ஒரு சபலப்புத்தி கொண்டவர் என குறிப்பிட்டுள்ள மகிந்து. கெஹெலியவின் மகளே, சவேந்திர சில்வாவை குழப்பியிருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

அதேவேளை, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஜானகி என்ற நடிகையுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தில் ஒளிப்பரப்பாகும் நாடகங்கள் எவை என்பது பற்றி, அந்த நடிகையே தீர்மானிப்பதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அண்மையில் ஒரு நாள், அமைச்சர் கெஹெலியவின் மனைவியும் மகனும், அந்த நடிகை மீது பகிரங்மாக தாக்குதல் நடத்தியிருந்தாகவும் இந்த செய்தியை ஊடகங்களில் கசிவதை தானே தடுத்து நிறுத்தியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தில் இருந்தும் கிடைத்துள்ள தகவல்களின்படி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கெஹெலியவின் மகளிடம் மன்னிப்பு கோரியுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் இந்த பிரச்சினையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டாம் என ஜனாதிபதி அமைச்சர் கெஹெலியவிற்கு அறிவித்துள்ளார்.