Lanka News Web

இலங்கை கிரிக்கெட் போட்டிகளின் உரிமத்தை யோசித்த ராஜபக்‌ஷவின் கார்லன்ட் ஸ்போட்ஸ் பெற்றுக்கொண்டுள்ளது

  • PDF

இலங்கை - பாகிஸ்தான், இலங்கை தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி ஒளிபரப்பு உரிமத்தை ஜனாதிபதியின் இளைய புதல்வர் யோசித்த ராஜபக்‌ஷவிற்குச் சொந்தமான கார்லன்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேவைப் பெற்றுக்கொண்டுள்ளது.

முல்லேரியா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக அனைவரதும் கவனம் திரும்பியுள்ள சந்தர்ப்பத்தில் சூட்சுமமான முறையில் இதற்கான உரிமத்தை அந்தத் தொலைக்காட்சி பெற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்தப் போட்டிகளை இலங்கையில் ஒளிபரப்புச் செய்வதற்கு டென்ஸ் ஸ்போர்ட்ஸ் விலை மனுக் கோரியிருந்த நிலையில், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆறு லட்சம் அமெரிக்க டொலரில் விண்ணப்பத்தை முன்வைத்திருந்தது.

இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேச போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தைப் பெற்றுக்கொண்டுள்ள டென்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் அண்மையில் நிறைவடையவுள்ளது.

அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள கார்லன்ட் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் நிறுவனம், அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து நீடிப்பதாக வாக்குறுதி வழங்கி தற்போது மேற்குறிப்பிட்ட போட்டி ஒளிபரப்பு உரிமத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இதனால் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு பாரிய வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரியொவருர் தெரிவித்தார்.