Lanka News Web

திலங்க சுமதிபால எம்.பியை கைதுசெய்வதற்கு தயார் நிலை!

  • PDF

ஜனாதிபதி ஆலோசகர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவைக் கொலை செய்ய திட்டமிட்டதாகக் கூறி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மிக நம்கரமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை சம்பந்தமாக ஆளும் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையாளர் துமிந்த சில்வா மீது கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. இதுவே சுமதிபால மீது குற்றச்சாட்டை சுமத்துவதற்கு முக்கியமான நோக்கமாகும்.

கொடிகாவத்த முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் பிரசன்ன செங்கோலாராச்சியின் மனைவியான மது என்பவரை துமிந்த சில்வாவும், அவரது பாதாள உலகக் குழு சகாக்களும், பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த தயாராகி வருவதாக பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவிற்கு அறிவித்தது திலங்க சுமதிபாலவிற்கு நெருக்கமான ஒருவர் என உறுதிப்படுத்த, இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தோல்வியடைந்த தொகுதிகளின் அமைப்பாளர்களை நீக்கப் போவதாக ஜனாதிபதி நேற்று தெரிவித்திருந்தார்.

திலங்க சுமதிபால மற்றும் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி ஆகியோரை இலக்குவைத்தே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருந்ததாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நடந்துமுடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட மத்திய கொழும்பு, கொழும்பு வடக்கு, கொழும்பு மேற்கு, கொழும்பு கிழக்கு, பொரல்லை ஆகிய ஐந்து தொகுதிகளில் ஆளும் கட்சி தோல்வியடைந்தது. திலங்க சுமதிபால, பொரல்லைத் தொகுதியின் அமைப்பாளராவார். அத்துடன் அமைச்சர் பௌசி மத்திய கொழும்பு அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.