Lanka News Web

பிரேமச்சந்திர கொலைக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை சுமுகப்படுத்த ராஜபக்‌ஷ சகோதர்கள் பல்வேறு முயற்சி

  • PDF

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் கொலைக்குப் பின்னர் ஆளும் கட்சி மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்திக்குள்ளாகியிருக்கும் பாதுகாப்புச் செயலாளரை அந்தச் சம்பவத்துடன் தொடர்புபடவில்லை எனக் காண்பிப்பதற்காக ராஜபக்‌ஷ சகோதரர்கள் தீர்மானித்துள்ளனர்.

முக்கியமாக பிரமேச்சந்திரவின் மரணச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் கோதாபயவின் பெயரைக் கூறி திட்டியதன் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பாரதவின் நம்பிக்கைக்குரிய சகாவான பிரசன்ன செங்கோலாராச்சியை தொலைபேசியில் தொடர்புகொண்ட பாதுகாப்புச் செயலாளர் நிலைமையை சுமுகமாக்குவதற்கு உதவுமாறும் அதற்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் வழங்குமாறு கூறியுள்ளார்.

இந்த நிலையில், நிலைமை சுமுகமாகும் வரையில் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, கொலன்னாவை தொகுதிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் அந்தத் தொகுதியின் அமைப்பாளர் பதவியை செங்கோலாராச்சிக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, கொலன்னாவ தொகுதி முழுவதும் சென்று மக்களிடம் துக்கம் விசாரித்துவருவதுடன் துமிந்த சில்வாவை விமர்சித்து வரும் கதைகளை அமைதியாக செவிமடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.