களனிப் பிரதேசத்தில் சண்டியனும் நானே, அரசியல்வாதியும் நானே என பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
களனி தர்மலோக பாடசாலைக்கு இன்று விஜயம் செய்திருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பாடசாலைக்கு சென்ற அமைச்சர் பாடசாலைக்கு வெளியே நின்றிருந்த நபர் ஒருவரை பலர் முன்னிலையில் மிகவும் மோசமான முறையில் திட்டியுள்ளார்.
அமைச்சு அதிகாரத்தைப் பயன்படுத்தி குறித்த நபரை தாக்குவதற்கும் அமைச்சர் முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை அபிவிருத்தி தொடர்பான நலன்புரி லொத்தர் சீட்டிலுப்பில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குரல் கொடுத்த நபர் ஒருவரே இவ்வாறு அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
அமைச்சர் மேர்வின் சில்வா மிகவும் மோசமான முறையில் குறித்த நபரை திட்டித் தீர்க்கும் காட்சிகள் இலங்கையின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளது.
களனி பிரதேசத்தில் சண்டியனும், அரசியல்வாதியும், மந்திரியும், அமைச்சரும் நானே, இங்கே எவருக்கும் விளையாட்டு போட முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.





