கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றுவதற்காக முஸ்லிம் மக்கள் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் தவறான தகவல்களைப் பரப்பும் பிரசார நடவடிக்கையொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
மகிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் அண்மைய சம்பவமாக சிங்கள ராவய தேசிய அமைப்பு, அதன் கீழான பெளத்த பாதுகாப்பு அமைப்புகள், பெளத்த அமைப்புகள் என்ற பெயரில் சிலர் அநுராதபுரத்தில் நாசவேளையொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
அநுராதபுரம், குருணாகல் சந்தியில் அமைந்திருந்த (ஒட்டுப் பள்ளம்) மிகப் பழமைவாய்ந்த முஸ்லிம் ஸியாரம் ஒன்று கடந்த திங்கட்கிழமை திடீரென அங்கு வந்த ஒரு குழுவினரால் முற்றாகத் தரைமட்டமாக்கியிருந்தனர்.
இந்த அமைப்புக்களின் பெயரில் சிலரைப் பயன்படுத்தி கொழும்பிலும் முஸ்லிம் - சிங்கள மக்களுக்கிடையே குழப்பகரமான நிலையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவருகிறது.






