நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்சவின் கீழுள்ள ''வீடமைப்பு'' துறை எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின்போது பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.
இதன்படி புதிய அமைச்சரவையில் கோதாபய ராஜபக்ஷவின் கீழ் பாதுகாப்பு, நகர அபிவிருத்தி, வீடமைப்பு ஆகியதுறைகள் கொண்டுவரப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
எனினும், விமல் வீரவங்ச அமைச்சரின் கீழுள்ள நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், பொது வசதிகளை அமைச்சர் விமல் வீரவங்சவிற்கே வழங்கப்படவுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.





