Lanka News Web

இணையத்தளங்களுக்கு சேறுபூசும் செய்தி வழங்கும் ஊடகவியலாளர் அடையாளம் காணப்பட்டாராம்!

  • PDF

''இணையத்தளங்களுக்கு சேறுபூசும் செய்திகளை வழங்கும் ஊடகவியலாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்'' என்ற தலைப்பில் அரசாங்கத்தின் தினமின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்தி லேக்அவுஸ் நிறுவனத்தின் தலைவரை இலக்குவைத்து வெளியிடப்பட்ட ஒன்று என லேக்அவுஸ் நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் லேக் அவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீட பணிப்பாளராக இருந்த பந்துல பத்மகுமார, தற்போதை கூட்டமைப்பு அரசாங்கத்தின் கீழ் அந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தினமின பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஊடகவியலாளர், எதிர்க்கட்சிக்கும், ஆளும் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது லேக் அவுஸ் தலைவர் பந்துல பத்மகுமாரவைத் தவிர வேறொருவரும் இல்லையென லேக்அவுஸ் நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமின பத்திரிகையின் குறித்த செய்திக்கு அமைய, குறித்த ஊடகவியலாளர் கொழும்பில் சொகுசு வீடு, வாகனம் ஆகியவற்றுடன் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது லேக் அவுஸ் தலைவர் பந்துல பத்மகுமார, கொழும்பு, பௌத்தாலோக மாவத்தையில் வசித்துவரும் நிலையில், கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தில் புதிய சொகுசு வீடொன்றையும் கொள்வனவு செய்துள்ளார்.

லேக் அவுஸ் நிறுவனத்திற்கு அச்சு இயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்வதாகக் கூறி, வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை வெளிநாடு செல்வது வழமையாகும். அந்தச் செய்தியில் அடையாளம் காணப்பட்டுள்ள ஊடகவியலாளர் வெளிநாடுகளுக்குச் சென்று வருவதாகவும், வெளிநாட்டவர்களுக்கு தகவல்களை வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சு இயந்திரம் பற்றி அறிந்த நிபுணர்கள் இருக்கின்ற போதிலும், அச்சு இயந்திரம் பற்றி நுண்ணிய அறிவு இல்லாத லேக்அவுஸ் நிறுவனத் தலைவர் வெளிநாடு செல்வதையும் அந்தச் செய்தியையும் ஒப்பிடும்போது பந்துல பத்மகுமாரவை இலக்குவைத்தே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பதை உறுதியாகிறது.