Lanka News Web

நாமல் ராஜபக்‌ஷவின் சகா விகாரை சலுகையைப் பயன்படுத்தி வாகனம் இறக்குமதியில்!

  • PDF

சுங்க வரித் தீர்வை மூலம் அனைத்து பௌத்த விகாராதிபரிகளுக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கும் அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி கடந்த31ஆம் திகதி 20 வாகனங்கள் மோசடியாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

எனினும், இந்த மோசடியைச் செய்த வர்த்தகரையும், வாகனங்களையும் 08 கோடி ரூபா அபராதம் விதித்து விடுத்துள்ளதாக சுங்கப் பிரிவின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மேலும் தகவல்களைத் திரட்ட முற்பட்டபோது, இந்த வர்த்தகர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு நெருக்கமானர் எனத் தெரியவந்தது.

இந்த மோசடிக்கு சுங்கப் பிரிவினர் உயர் அதிகாரிகள் சிலரும், மோட்டார் வாகன ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இந்த மோசடி குறித்து தகவல்கள் வெளிவருதத்தைத் தடுப்பதற்காக இந்த வர்த்தகருக்கு அபாரதம் விதித்து விடுத்தபின்னர் இதுகுறித்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கான உத்தரவுகளை நாமல் ராஜபக்ஸவே சுங்க அதிகாரிகளுக்கு நேரடியாக வழங்கியுள்ளார்.

விகாரைகளுக்கான சுங்கத் தீர்வை அனுமதிப்பத்திரங்களைப் பயன்படுத்தி கடந்த காலங்களில் நூற்றுக் கணக்கான வாகனங்கள் தருவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.