Lanka News Web

IPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மெத்யூஸ் மீது குற்றச்சாட்டு!

  • PDF

இலங்கை கிரிக்கெட் வீரர் அஞ்சலோ மெத்யூஸ் இந்திய பிரிமியர் லீக் போட்டித் தொடரில் (IPL) சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

நோ போல், வைட் பந்துகளை வீசுவதற்காக அஞ்சலோ மெத்யூஸ் 10 கோடி ரூபாவை அஞ்சலோ மெத்யூஸ் பெற்றுக்கொண்டதாக பிரபல சூதாட்ட ஒப்பந்தக் காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாக சபை இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபைக்கு அறிவித்துள்ளது.

அண்மையில் கைதுசெய்யப்பட்ட மும்பை சூதாட்ட ஒப்பந்தக்காரரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளிலிருந்து இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.