Lanka News Web

நிதிச் செயலாளரும், பொலிஸ்மா அதிபரும் மன உலைச்சலில்!

  • PDF

தத்தமது பணிகளில் அரசியல் தலையீடுகள் தொடர்ந்தால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாது என நிதியமைச்சின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவும், பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்கக்கோனும் தெரிவித்துள்ளனர்.

தவிர்க்க முடியாத அரசியல் தலையீடுகளினால் இவ்விருவரும் மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான அரசியல் தலையீடுகளினால் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு நெருக்கமான வர்த்தக மோசடியாளர் சிலர் நிதியமைச்சின் தீர்மானங்களிலும், வேலைத் திட்டங்களிலும் தலையிடுகின்றனர். இந்நிலைமை ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் அபாய நிலையை ஏற்படுத்தியுள்ளது என பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு நெருக்கமான இந்த மோசடி வர்த்தகர்களை நிதியமைச்சின் செயலாளர் ''பொருளாதாரக் கொலையாளிகள்'' என்ற பெயரில் அடையாளம் கண்டுள்ளார்.

இந்த நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக தான் ஓய்வுபெற்றுக்கொள்வதாக ஜனாதிபதியிடம் பல முறை வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தனது வேண்டுகோளை ஜனாதிபதி நிராகரித்ததாகவும் நிதிச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா வழங்கிய தீர்ப்பை இரத்துச் செய்து ஜனாதிபதி தனக்குச் செய்த உபகாரத்திற்கு நன்றி செலுத்தும் வகையில், அவரை நெருக்கடிக்குள் தள்ள முடியாத நிலையில் தான் இருப்பதாகவும், ஜனாதிபதியை மீறி பதவியிலிருந்து விலக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நிதிச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரான மனோ தித்தவெல்லவுடனான சந்திப்பின்போதே நிதிச் செயலாளர் மேற்கண்டவாறு தனது மனக்குமுறலை கொட்டியுள்ளார்.

இவ்வாறு தன்னை பதவி விலக அனுமதிக்குமாறு பொலிஸ்மா அதிபரும், பாதுகாப்புச் செயலாளரிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ள போதிலும், கோதாபய ராஜபக்‌ஷ இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

விளைச்சி புதையல் கொள்ளையில் தன்னைப் பலிக்கடாவாக்கியதால் பொலிஸ்மா அதிபர் இடிந்துபோயுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து பாதுகாப்புச் செயலளின் உத்தரவிற்கமைய பொலிஸ்மா அதிபர் அறிக்கையொன்றை வெளியிட்டு தன் தலையில் மண்ணைவாறிக் கொட்டிக்கொண்டார் என்பது நினைவூட்டத்தக்கது.

இந்தச் சம்பவமே பொலிஸ்மா அதிபரை மனஉலைச்சலுக்குத் தள்ளியுள்ளதாக அவரது நண்பர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.