Lanka News Web

பொலிஸாரின் வலையிலிருந்து நழுவிவரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அரச தொலைக்காட்சி பிரதானி!

  • PDF

நீதிமன்றினால் பலமுறை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அரச தொலைக்காட்சியின் பிரதானி சுதர்மன் ரந்தலியகொட தொடர்ந்து பொலிஸாரின் வலையிலிருந்து நழுவி வருகிறார்.

நேற்று முன்தினம் (12) முற்பகல் 10.20க்கு நுகேகொட, மிரியானவிலுள்ள கொழும்பு பிராந்தியத்தின் வட மேற்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஐ.எம். கருணாரத்னவை சுதர்மன் ரந்தலியகொடவும், அவரது நண்பர்கள் சிலரும் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர்.

நீண்ட கலந்துரையாடலின் பின்னர், மிரிஹான பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவிற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எஸ்.டி. கருணாரத்னவும் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எக்காரணத்திற்காகவும் சுதர்மன் கைதுசெய்யப்படக் கூடாது என பிரதி பொலிஸ்மா அதிபர் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

விசேட மோசடி தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியினால் சுதர்மன் ரந்தலியகொடவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை குறித்தும் இந்தச் சந்தர்ப்பத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, சுதர்மன் கைதுசெய்யப்படாமைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமொன்றை நீதிமன்றில் தெரிவிக்கத் தயாராகுமாறும், இந்தக் காரணம், நீதிபதி கடுமையான தீர்மானங்களை எடுக்காத வகையில் இருக்க வேண்டும் எனவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

கடுவலை நீதவான் சிக்கலான விதத்தில் நடந்துகொள்ளாமல் இருப்பது தனது பொறுப்பு என பிரதி பொலிஸ்மா அதிபர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மிரிஹான பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியை, பிரதி பொலிஸ்மா அதிபர் அங்கிருந்து அனுப்பிவைத்துள்ளார்.

பின்னரு;ம சுதர்மன் ரந்தலியகொடவுடன் நீண்டநேரம் பிரதி பொலிஸ்மா பேச்சு நடத்தியுள்ளார்.

நுகேகொட, பாகொட வீதியில் அமைந்துள்ள சுதர்மனுக்குச் சொந்தமான காணியை தான் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே சுதர்மனுக்கு சார்பாக பிரதிபொலிஸ்மா அதிபர் ஐ.எம். கருணாரத்ன நடந்துகொள்வதாக மிரிஹான பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.