போலியான ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொட நகர மத்தியிலுள்ள 85 பேர்ச் காணியொன்றை அமைச்சர் மேர்வின் சில்வா கொள்ளைசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் காணிக்கொள்ளையுடன் அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் மீரிகம விமலே என்றழைக்கப்படும் விமல் அத்தநாயக்க, கம்பஹா நகர சபையின் உபலைவர் அஜித் பஸ்நாயக்க, அவரது சகா உள்ளிட்டோரும் தொடர்புபட்டுள்ளனர்.
கப்ரால் என்ற நபருக்கு உரித்தான காணியே அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினரால் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்தக் காணியில் இரண்டிக் கட்டிடத் தொகுதியொன்றும் இருக்கிறது. இதில் இரண்டாம் மாடி கடைகளை 22 லட்ச ரூபாவிற்கும், கீழ் மாடி கடைத் தொகுதியை 24 லட்ச ரூபாவிற்கும் விற்பனை செய்துள்ளனர்.
இதில் 6 லட்சம் ரூபா களனி பிரதேச சபையின் உபதலைவர் அஜித் பஸ்நாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் காணிக்காக தயாரிக்கப்பட்ட போலி உறுதிப்பத்திரத்தில் பிரதான உரிமையாளராக அமைச்சருக்கு நெருக்கமான மீரிகம பிரதேசத்திலுள்ள நபர் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்தப் போலி உறுதிப்பத்திரம் களனி வராகொட பிரதேசத்தில் வசித்துவரும் சட்டத்தரணி யூ.ஏ.பிரேமசுதந்தரவே தயாரித்துள்ளார்.
மீரிகம விமலகே என்பவர் தனது மனைவியைக் கொலை செய்ததற்காக குற்றஞ்சாட்ட்டவராவார்.
கிரிபத்கொட பொலிஸ் நிலையம் தற்போது அமைந்துள்ள காணியின் அருகில் இந்த கொள்ளையிடப்பட்ட காணி காணப்படுகிறது.





