ஹம்பாந்தோட்டை, தங்காலை, மெதகம பிரதேசத்திலுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிலுள்ள சிப்பாய்கள் சிலர் கொள்ளை உள்ளிட் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி உள்ளிட்ட குடும்ப உறவினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தங்காலைப் பிரதேசத்தில் இந்த முகாம் அமைக்கப்பட்டது.
இந்த முகாமில் பணியாற்றிவரும் அதிகாரிகள் சிலர் உள்ளிட்ட சிப்பாய்கள் பகிரங்க மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டி வருிகன்றனர்.
பிரதேசத்தில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்களுடன் இவர்களுக்கு நேரடி தொடர்பிருப்பதாக மக்கள் பகிரங்கமாக குற்றஞ்சுமத்துகின்றனர். எனினும், இவர்களுக்கெதிராக இதுவரை எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் கூறப்படுகிறது.





