பூமியை மிகவும் துல்லியமாக கண்காணிக்கக் கூடிய லேசர் தொழில்நுட்ப ஆயுதங்கள் சிலவற்றை பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, அவரது நெருங்கிய சகாவான விசேட அதிரடிப்படையின் மேஜர் கொடமுன்னவிடம் கையளித்துள்ளதாக தெரியவருகிறது.
ஈரான் ஆயுத வர்த்தகரான நுஸ்ரிட் ஜேகன் ஊடாக கடந்த ஜனவரி மாதம் இந்த ஆயுதங்களைப் பாதுகாப்புச் செயலாளர் இலங்கைக்குத் தருவித்துள்ளார்.
அண்மையில் பகிரங்கமான பல புதையல் கொள்ளைகளில், மேஜர் கொடமுன்னவின் படையணியே ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
புதையல் கொள்ளையிட்ட இடங்களைப் சோதனை செய்து அறிக்கை தயாரித்த களனி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பேராசிரியர், புதையல் இருப்பதைக் கண்டுபிடிக்க நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த செய்தி வெளியானதை அடுத்து புதையல் கொள்ளையில் ஈடுபட்ட படையணியை பாதுகாப்புச் செயலாளர் அவசரமாக சிங்கப்பூருக்கு அனுப்பிவைத்துள்ளார்.





