தமிழ் இன அழிப்பின் உச்சக் கட்டமாகிய முள்ளிவாய்க்கால் அவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவினை முன்னிட்டு, கனடிய மாணவர் சமூகம் இணைந்து முன்னெடுக்கும் 'மீள் எழுச்சி நாள்' நினைவு நிகழ்வு
எதிர்வரும் மே 19ஆம் திகதி ஒன்ராறியோ நாடாளுமன்ற முன்றலில் குயின்ஸ் பார்க்கில் நடைபெறும்.
எதிர்வரும் மே 18ஆம் திகதியன்று ஸ்காபுரோ சிவிக் சென்டரின் முன்னால் அமைந்துள்ள அல்பேர்ட் காம்பெல் சதுக்கத்தில் போர்க்குற்றநாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, கனடிய மாணவர் சமூகத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள இந்நிகழ்வு எதிர்வரும் மே 19ஆம் திகதி, சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நினைவு நிகழ்வினை அனைந்து பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் முன்னின்று நடத்தவுள்ளனர்.
மூன்றான்டுகளுக்கு முன்னர் எம் கண்முன்னே எம் மக்களுக்கு நடந்த அவலத்தினை உலகின் முன் நிறுத்தி மீள் எழுச்சி கொண்டு எம் இலட்சியத்தினை அடையும் வரை ஓயோம் என உறுதியெடுத்துக்கொள்வோம்.
எனவே அனைவரும் அன்றைய நாள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நாம் ஓயவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை ஓங்கி ஒலிக்கச் செய்வோம்.






