ஆளும் தரப்பு மே தினப் பேரணியில் பசில் ராஜபக்ஷவிற்கு ஆதரவான திலங்க சுமதிபால ஆதரவாளர்களுக்கும், மே தின ஏற்பாடுகளுக்குப் பொறுப்பாகவிருந்த கோதாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் மே தினப் பேரணியின் ஏற்பாட்டுப் பணிகளுக்கு, பாதுகாப்புச் செயலாளரின் ஆதரவாளரான இளைஞர் படையணியின் கேர்ணல் தர்ஷன ரத்நாயக்கவே பொறுப்பாக செயல்பட்டார். (0773265150)
பேரணியை ஆரம்பித்து, அணி வகுத்த வாகனத்திற்கு சுனில் திஸாநாயக்க என்ற பாதுகாப்பு அதிகாரி பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். இதனைத் தவிர பேரணியை முழுமையாக தர்ஷன ரத்நாயக்கவே கட்டுப்படுத்தியிருந்தார். இவருக்கு உதவியாக 200 படையினர் சிவில் உடையில் களமிறக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், பொரல்லை தொகுதி அமைப்பாளரான திலங்க சுமதிபால, பேரணியின் ஏற்பாடுகள் குறித்த பல முறை தர்ஷனவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். எனினும், எந்தவொரு ஆலோசனையையும் தர்ஷன கருத்திற்கொள்ளவில்லை. இதனால், பொரல்லை கெம்பல் விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு மாத்திரமே திலங்க சுமதிபால மட்டுப்படுத்தப்பட்டிருந்தார்.
கேர்ணல் தர்ஷன ரத்னநாயக்கவின் பணிகளுக்கு உதவியாக சட்டத்தரணி சுமித் விஜேசிங்க (0718880888), ரஞ்சித் ஹெட்டியாராச்சி, (0777780083), உபாலி கமகே (0773679343), கீர்த்தி திஸாநாயக்க (0714098217) ஆகியோரும் பிரதான பணிகளை ஏற்றிருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்திருந்த திலங்க சுமதிபால எம்.பி.யின் ஆதரவாளர்கள் பேரணி ஏற்பாட்டின் போதும், பேரணி சென்ற போதும் பேரணிக்குப் பொறுப்பாக இருந்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் பல முறை முரண்பட்டுள்ளனர்.
இதுகுறித்து திலங்க எம்.பி.க்கு ஆதரவாளர்கள் முறையிட்ட போதிலும், பாதுகாப்புத் தரப்பினர் கோதாபய ராஜபக்ஷவினால் களமிறக்கப்பட்டதால் திலங்க எம்.பி. மௌனம் காத்துள்ளார்.