தொழிலாளர் உரிமைகளை செயலிழக்கச் செய்ய புதிய சட்டம் ஒன்றை அமுல்படுத்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தொழிலாளர்களின் உரிமைகளைப் போலவே முதலாளிமார் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற போர்வையில் இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.
இந்த முயற்சிக்கு தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
புதிதாகக் கொண்டுவரப்படுகின்றன சட்டத்திற்கமைய அனைத்து தேசிய தொழிலாளர் அமைப்புடன் இணங்கியுள்ள 87 மற்றும் 98 ஆவது சரத்துக்களை மீறும் செயல் என அனைத்து தேசிய தொழிலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
87 ஆவது சரத்தின் மூலம் தொழிலாளர்களுக்கான உரிமையும் 98ஆவது சரத்தின் மூலம் இணக்க அடிப்படையில் கூட்டு கொடுக்கல் வாங்கல் செய்யும் உரிமையும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
முதலாளிமாரின் உரிமைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களுக்குத் தடை விதித்தல், சம்பள குறைப்பு உள்ளிட்ட அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்தச் சட்ட மூலத்தை முதலாளிமார் தயாரித்துள்ளதாகவும் அரசாங்கம் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் ஓய்வூதிய சட்;ட மூலத்தை; அரசாங்கம் நிறைவேற்றிக் கொள்ள முயற்சித்த போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அது கைவிடப்பட்ட நிலையில் ஒருவருடம் கழிந்து மற்றுமொரு சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.





