Lanka News Web

மின்னஞ்சல் அச்சிடுக PDF

அமைச்சர் மேர்வின் சில்வாவின் சோதிட ஆலோகரான ராகம 'லொகு சிய்யா' என்ற நபர் கடந்த 27ஆம் திகதி 06 கிலோகிராம் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

இறுதியாக நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கொழும்பு மாநகர சபையில் தோல்வியைச் சந்திக்க பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராபஜக்‌ஷவின் செயற்பாடுகளே காரணம் என நகர சபையின் புதிய உறுப்பினர் மகிந்த கஹதகம தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

இலங்கையின் முன்னணி ஊடக நிறுவன உரிமையாளர் ஒருவர் சிங்கப்பூர் ஷாங்கி சர்வதேச விமான நிலையில் அந்நாட்டு குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ஜனாதிபதியின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷவிற்கு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ காய்வெட்டி வருவதாக (வேற்றுமை காட்டிவருவதாக) அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட நால்வர் கொல்லப்பட்டச் சம்பவத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு நாடாளுமன்ற துமிந்த சில்வாவிற்கு நெருக்கமான பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரை சிலர் வற்புறுத்தி வருகின்றனர்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

உத்தேச கொழும்பு நகர ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு மிலிந்த மொரகொடவை நியமிக்க வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் நந்தசேன கோதாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தமக்கெதிராக பாரிய குற்றச்சாட்டுக்களையும், அழுத்தங்களையும் கொடுத்து வருகின்ற நிலையில் இவர்களுக்கு எதிராக ஏன் பிரசாரங்களை முன்னெடுக்கவில்லையென பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ தனியார் ஊடகத் தலைவர்களிடம் வினவியுள்ளார்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ஜனாதிபதியின் ஆலோசகர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட நால்வர் கொல்லப்பட்டச் சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கு அழுத்தம் ஏற்படும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள B அறிக்கையில் உள்ள விடயங்களை ஊடகங்களில் பிரசாரப்படுத்த வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் தனியார் ஊடகங்கள் சிலவற்றிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் உத்தரவின் பேரில் கைதுசெய்யப்பட்ட துமிந்த சில்வாவிற்கு நெருக்கமான பாதாள உலகக் குழுத் தலைவரான தம்மிக பிரதீப் குமார என்பவரை கொழும்பு ஹெலொக்டவுன் பிரதேசத்தில் இரகசியமான இடமொன்றில் பாதுகாப்பாக வைத்துள்ளதாக தெரியவருகிறது.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன மீது சேறுபூசும் பிரசாரத்தை ஜனாதிபதிக்கு நெருக்கமான சில தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

நாட்டில் தற்போது நிலைகொண்டுள்ள அடாவடித்தனமான அரசியலுக்கெதிராக மக்கள் கருத்தொற்றுமையைக் கட்டியெழுப்புவதற்காக விசேட அரசியல் செயல்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலியே ரத்தன தேரர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பங்கு, பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவின் மனைவி இந்திராணி சுகனதாஸவை அந்தப் பதவியிருந்து நீக்கிவிட்டு அந்தப் பதவிக்குப் பொருத்தமான ஒருவரை நியமிக்குமாறு பங்கு, பரிவர்த்தனை மேற்கொள்ளோம் தரப்பினர் சிலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

செனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக இலங்கை அரசாங்கமும் , அரச ஆதரவு சிங்கள அமைப்புக்களும் செய்த முறைப்பாட்டை பிரித்தானியாவில் ஊடகங்களை கட்டுப்படுத்தும் ஆணைக்குழுவான ஒப்கொம் நிராகரித்துள்ளது.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக போர்க்குற்றம் சுமத்தப்பட்டு அவுஸ்ரேலிய மெல்பேர்ன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.