பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர் மற்றும் அவ்வமைப்பின் நெறியாளர் டிலன்த விதானகே ஆகியோரை ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு நிறைவுபெறும்வரை தடுப்புக் காவலில் வைக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதாபே ராஜபக்ஷ, சிரேஷ்ட உதவிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயகவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என மிகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.

போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்ச மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழகத்தில் தீக்குளித்தவர் மரணித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் உத்தியோகபூர்வமற்ற காவல்துறையினர் தமது அமைப்பே என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

இறுதிப் போரின் பொழுது இலங்கை இராணுவம் பல்வேறுப்பட்ட போர் குற்றச்செயல்களில் ஈடுப்பட்டுள்ளது. 26 வருடங்கள் உள்நாட்டில் தொடர்ந்த போரின் போது நிகழ்ந்த குற்றச்செயல்கள் அனைத்தும் கொழும்பின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் கடந்த வெள்ளிக்கிழமை திரையிடப்பட்டது.

இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறும் தன்மை மற்றும் மறுசீரமைப்பு விடயங்களில் தாமதத்தை வெளிப்படுத்துகின்றமை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் கோயம்புத்தூரில் உள்ள இலங்கைச் சிங்களவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தமிழீழ ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐ.நா மன்ற மனித உரிமைக்கவுன்சில் கடந்த ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது இலங்கை அரசு இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற நிலையில், இது குறித்து மீண்டும் ஒரு தீர்மானம் இந்த ஆண்டு வரும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக, தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார்.

அமைச்சர் மைத்ரிபால சிரிசேனவை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அமைச்சர் டலஸ் அலகப்பெருமவை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

'கோட்டைக்குப் போறவன் கேட்டுத் தின்னான்' 'இனி நான்தான் கோட்டையிலே செருப்பு'
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்ரிபால சிறிசேனவுக்கும் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் இடையில் "பனிப்போர்" நடைபெற்று வருவது பகிரங்க ரகசியமாக உள்ளது.
இதனை அறிந்து, பிரதமர் பதவி குறித்த கனவுகளில் மூழ்கியிருக்கும் மூத்த அமைச்சரொருவர் பதவியேற்பு நிகழ்வுக்கான உடைகளைத் தயார் செய்வதில் ஆர்வமாய் இருப்பதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருந்த மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாடுதிரும்பியுள்ளார்.

ஜப்பான் உள்ளிட்ட ஐந்து நாடுகளால் தயாரித்து வழங்கப்பட்ட இலங்கை தொடர்பான கண்துடைப்பு அறிக்கையை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டதாக இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையினால் கொழும்பு, புதுடில்லி, ஜெனிவா, வாசிங்டன் இந்த நான்கு நகரங்களுக்கும் இடையில் ஒரு வெளிப்படையான இராஜதந்திரப் போர் நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த வியாழக்கிழமை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக பெசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் முகமாக நாடு முழுவதும் உள்ள ஶ்ரீல.சு.க.யின் கிளை அலுவலகங்களிலும், வாழ்த்து பேணர்கள் காட்சிப்படுத்த வேண்டும் என ஶ்ரீல.சு.க.யின் தலைமையகம் அறிவித்திருந்தது.
பொதுபல சேனா என்ற அமைப்பு சர்வதேச சதிகார வலைப்பின்னல் சக்திகளின் திட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் ஜீவாதார உரிமைகளிலும், தார்மீகக் கடமைகளிலும், ஆண்டாண்டு காலமாக அந்நியொன்னியமாக வாழ்ந்துவரும் இரு சகோதர இனங்களின் புரிந்துணர்வைச் சிதைக்கும் விதத்தில் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பது பல்லின மக்கள் வாழும் எமது ''இலங்கை'' நாட்டுக்கு ஒரு ஆரோக்கியமான நிகழ்வாக அமையமாட்டாது.
மேலதிகக் ஆக்கங்கள்...
- பெசிலுக்கு எதிராக ஆளும் கட்சியிலுள்ளவர்கள் ''போர்க் கொடி''
- சூடுபிடிக்கும் சந்திரிக்காவின் "தேசிய அரசாங்கம்" என்ற யோசனை!
- ஐ.நா மனித உரிமைச்சபையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ''போர் தவிர்ப்பு வலயம்''
- இராணுவத்தின் காணிக் கொள்ளை - கேபாபிலவு மக்கள் தொடர்ந்து காடுகளில்!
- இராணுவ உயரதிகாரிகளை சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் ராஜபக்ஷ சகோதரர்கள்!






