கொழும்பு 7 ரொறிங்டன் அவனியூவில் இலக்கம் 3 இல் அமைந்துள்ள விழுதுகள் மேம்பாட்டு நிலையத்தின் மீதான தாக்குதலுக்கும் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கும் நேரடிச் சம்பந்தமிருப்பதாகாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தென்மராட்சியின் மறவன்புலோ- தனங்களப்பு பகுதியில் கடந்த நவம்பர் மாதமளவில் காணாமல் போயிருந்த யுவதியொருவர் இரண்டு மாதங்களின் பின்னர் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார்.

வெள்ளை வேன்களில் கடத்திச் செல்லப்படும் நபர்களை கொலை செய்து சடலங்களை எரியூட்டுவதற்கு வசதியாக, எரிவாயு அறை வசதிகளை கொண்ட சில வாகனங்கள் நாட்டின் சில பகுதிகளில் காணப்படுவதாக ஜனரள பத்திரிகை தெரிவித்துள்ளது. பிணங்களை எரியூட்ட பயன்படுத்தப்படும் எரிவாயு அறைகள், இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட கடத்திச் செல்லப்பட்டு, கிழக்கு மாகாணத்தில் இரகசியமான இடமொன்றில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டதாக இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ள பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான பிரதீப் என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவதை முறியடிக்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு முக்கிய அமைச்சர்களை அனுப்பி ஆதரவு கோரவுள்ளார்.

தமிழர்களின் தீர்வை பின் தள்ளவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன் அவர்களை சந்திப்பதற்கு கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் கடிதம் எழுதியுள்ளார்.

விடுதலைப் புலிகளால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் பதிவை நீக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையால், சுமார் 30 அரசியல் கட்சிகளின் பதிவுகள் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் நாடாளுமன்றில் குரல் கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அஞ்சியதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கஞ்சா போதைப் பொருளை கடத்திய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் அங்கஜனின் ஏற்பாட்டில் ஜே.வி.பியினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக அழைத்து வரப்பட்டவர்களுக்கு பணமும் உணவு பொதியும் தருவதாக உறுதி யளிக்கப்பட்டிருந்த போதிலும் சிலருக்கு மட்டும் உணவுப்பொதி வழங்கப்பட்டதாகவும் வாக்குறுதியளித்த படி பணம் எதுவும் வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

பெப்ரவரி 04ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்யப்படாவிடின், பெப்ரவரி 5ஆம் திகதி முதல் புரட்சிகரமான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு ''சரத் பொன்சேக்காவை விடுவித்துக் கொள்ளும் தேசிய செயற்பாட்டாளர்கள்" தீர்மானித்துள்ளனர்.

நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதியொருவர் மீது கடந்த 18ஆம் திகதி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த இருவரும், சிறைச்சாலை காவலர்களின் முயற்சியினால் கைதுசெய்யப்பட்டனர்.

60 வயது கடந்த போதிலும் திறமையான, கடமையுணர்வுள்ள அமைச்சின் செயலாளர்களை தொடர்ந்தும் பதவி நீடிக்கச் செய்ய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளாக தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோட்டே தொகுதியின் அமைப்பாளர் ரோஹித்த போகொல்லாகமவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து, அவருக்கு வெளிவிவகார அமைச்சு பதவியை வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்க அதிகாரத்தை எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிடம் வகுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.






