தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விற்பனையிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்த வியாபாரிகளை பிரதேச அரசியல்வாதிகள் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளனர்.


இரத்தினபுரி பிரதேசத்திற்கான போதைப் பொருள் விநியோகம், கஹவத்த பிரதேசத்தில் இரட்டைக் கொலைச் சம்பவம் ஆகியவற்றுடன் அமைச்சர் ஜோன் செனவிரத்னவை தொடர்புபடுத்தி இரகசியப் பிரசாரமொன்றை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜெனீவா - மனித உரிமைகளுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பிலான சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணப்படம் திரையிடப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த, கைது செய்யப்பட்ட போராளிகளும், முன்னணித் தலைவர்களும், சிறுவர்களும் கூட- சிறிலங்கா படையினரால் திட்டமிட்ட அடிப்படையில் நீதிக்குப்புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பிரித்தானியாவின் ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏடு தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டும் நாட்டின் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் பாதுகாப்பு வேண்டி நாட்டில் உள்ள கோயில்களின் மணிகளை எழுப்புங்கள் என்று பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அவசரமான உத்தரவு ஒன்றை விடுத்துள்ளது. இந்த அவசர உத்தரவு அரசின் உத்தரவு என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிவாரணங்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் இதுவரையில் கோரவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாலும், இலங்கைக்கெதிராக அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ள பிரேணையை தோற்கடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் சூழ்ச்சித் திட்டம் எனவும், அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அமெரிக்க டொலர்களுக்கு நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளதாகவும் பிரசாரமொன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து தற்போது சிங்கப்பூர் ''மெர்சன்ட் எலிசபெத்'' மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டிலிருந்து அவரைக் காப்பாற்றுவதற்கு புதிய செயல்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் 10ஆவது மனித உரிமைகளுக்கான அனைத்துலக திரைப்படவிழாவில், தமிழினத்தின் மீதான இலங்கையின் போர்குற்றங்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

வவுனியா வடக்குப் பகுதியிலுள்ள மாதா தேவாலயத்தினுள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த திருச் சொரூபங்களை வெளியே வீசி அதனை அசிங்கப்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இப்பகுதியிலுள்ள இளமருதங்குளம் கார் மேல் மாதா தேவாலயத்தினுள் புகுந்த படையினரே இவ்வடாவடியில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் யோசனைத் திட்டம் தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கு இடையில் பாரியளவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத இன்னும் சில ஆதாரங்களும் வெளிவந்துள்ளன.

ஐ.நா மனித உரிமைச் சபையில் இடம்பெற்று வரும் பல்வேறு விவதாங்களிலும், சிறிலங்கா அரச தரப்பினர் தங்களை நியாயப்படும் வகையில், சபை அமர்வுகளில் தொடர்சியாக பங்கெடுத்து வருகின்றனர்.

சர்வதேச மகளீர் தினத்தில் 'விடுதலைக்கான மகளிர் அமைப்பினால்'' ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் குறித்த சுவரொட்டிகளை இராணுவத்தினர் அகற்றியுள்ளனர்.
மேலதிகக் ஆக்கங்கள்...
- ஜெனீவா போருக்கு 'நேஷன் மாலிந்த'வை அனுப்பத் தீர்மானம்!
- துமிந்தவிற்கு விடுமுறை வழங்குவதில் சபாநாயகருக்கு முரண்பாடு!
- ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணச்சீட்டு முகவர் உரிமம் ஷிரந்தி ராஜபக்ஷவின் சகாவிற்கு!
- அமெரிக்கத் தூதுவருடன் மகிந்த இரகசிய சந்திப்பு!
- இந்தியாவின் மௌனம் தொடர்கிறது! மௌனத்தைக் கலைக்க அமெரிக்காவின் உயர்மட்டக்குழு புதுடெல்லி விரைந்தது!