யுத்தத்தின் பின்னரான இலங்கையில் அமுல்படுத்தப்படும் கொள்கைகள் குறித்து சர்வதேச அனர்த்தக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.


மகிந்த ராஜபக்ஷவிற்கு இருக்கும் கண்டத்திற்கு பிராய்ச்சித்தம் செய்வதற்காகவும், ஏற்பட்ட நோய்யை சுகப்படுத்துவதற்கும் 'மனித பலி'' கொடுக்க தயாராகி வருவதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அமைச்சர் விமல் வீரவங்ச சுயநிலை மறந்து செயற்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது அரசாங்கத்திற்கு பாரிய அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடும் என 14ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை ஆர்வலர்களை இலக்கு வைத்து அரச ஊடகங்களும், அரசாங்கமும் மேற்கொண்டுவரும் சேறுபூசும் செயற்பாட்டை சுதந்திர ஊடக இயக்கம் கண்டித்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக ஊடக பிரசாரத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கையின் இறுதிக் கட்டப் போரில் நிகழ்ந்த யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய அரசாங்கம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ. நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு பல நாடுகள் தமது ஆதரவை வழங்கி வருகின்றன.

இங்கிலாந்தின் சேனல் நான்கு தொலைக்காட்சி, 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தினை வெளியிட்டது.

அண்மையில் கொழும்பு - வெல்லம்பிட்டிய பிரதேச மக்களினால் சுற்றிவளைக்கப்பட்ட WP 8649 இலக்கத் தகடுடைய வெள்ளை வாகனம், இராணுவத்தின் அதிகாரியொருவரால் கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து கடத்திவரப்பட்டது என இதற்கு முன்னர் தெரியவந்தது.

விரைவில் விடுவிக்கப்படுவதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்கு எதிராக தொடர்ந்தும் புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படுவது ஏன் என்பது பாரிய பிரச்சினை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் 2 ம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ள நிலையில், ஜெனிவாக் களத்துக்கு மேலும் முக்கியமான 100 அதிகாரிகளைக் களமிறக்கியுள்ள அமெரிக்கா, தனது இறுதிக்கட்ட முயற்சியை முழுவீச்சுடன் முன்னெடுத்து வருகின்றது என்று தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைச் சபையில் நாடுகளின் ஆதரவினைத் திரட்ட, இன, மதவாதத்தை இலங்கை முன்னிறுத்தி ஆதரவினை திரட்ட எத்தனிப்பதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றங்கள், இனப்படுகொலை விவகாரங்களுக்கான அமைச்சர் டிலக்சன் மொறிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்தவிற்கு ஏதேனும் நெருக்கடி நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குத் தேவையான செயல்திட்டமொன்றை பாதுகாப்புச் செயலாளர் தயாரித்து வருவதாக அறியமுடிகிறது.

உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக பரவி வரும் தகவல்களுக்குப் பதிலளிப்பதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்நாட்களில் ஊடகக் கண்காட்சியொன்றை முன்னெடுத்து வருகிறார்.

கொலன்னாவ நகர சபைத் தலைவர் ரவீந்திர உதயஷாந்தவை கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் துமின்த சில்வாவின் மைத்துனர் ஒருவர் தொடர்புபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலதிகக் ஆக்கங்கள்...
- லசந்த படுகொலையுடன் பொன்சேக்காவை சிக்கவைக்க சாட்சியங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன!
- வெல்லப்பிட்டிய பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரிக்கெதிராக குற்றப் பத்திரிகை தயாராகிறது!
- ''வெள்ளைவேன் குறித்து விசாரணை நடத்தி பதவியிழக்க முடியாது'' பொலிஸ் அதிகாரி
- இந்திய மைய அரசியலில் மையங்கொண்டுள்ள சிறிலங்கா விவகாரம்
- இலங்கையில் நூற்றுக் கணக்கானவர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் – சர்வதேச மன்னிப்புச் சபை






