ஜெனீவாவில் இலங்கைக்கெதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டதால் அமெரிக்காவைவிட இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அதிக சந்தோசத்தில் இருப்பதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜெனீவா மாநாட்டில் நேற்று (22) இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை, 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 24 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கெதிரான பிரேரணையை வெற்றிக்கொள்வதற்கு மகிந்த அரசாங்கம் பலத்த பிரத்தனம் மேற்கொண்டிருந்தது. எனினும், ஒரு மணி நேர விமானப் பயணத்தில் பிரான்ஸிலிருந்து வரவழைக்கக்கூடிய இராஜதந்திரி தயான் ஜயதிலக்க ஜெனீவாவிற்கு அழைக்கப்படாமை இராஜதந்திர மட்டத்தில் பரவலாக பேசப்பட்டது.

ஜெனிவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை 9 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிரான தீர்மானத்தை ஆதரிக்கும் முடிவை மாற்றிக் கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நேற்று இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக ஜெனீவா பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்த பின்னர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கருத்தையோ, விமர்சனத்தையோ வெளியிடாது மௌனம் காத்து வருவதால் மகிந்த ராஜபக்ஷ கடுப்பாகியுள்ளதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடம் தோல்வியடைந்த செய்தி கேட்டு ஜனாதிபதி மகிழ்ச்சியடைந்ததாக ஜனாதிபதி அலுவலக அதிகாரியொருவர் எம்மிடம் தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தில் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் கேர்ணல் ரமேஸ் கொடூரமாக கொல்லப்பட்டு எரியூட்டப்பட்ட படங்களை குளோபல் மெயில் வெளியிட்டுள்ளது.

தேசிய நூதனசாலையில் அண்மையில் இடம்பெற்ற களவுச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படாமை குறித்து தற்போது பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.

தனக்குத் திருப்தி இல்லாத எம்.பி.க்கள், அமைச்சர்களுக்கெதிராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தற்போது பழிவாங்கும் அரசியல் செயல்திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக அலரிமாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனீவான மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கெதிரான தீர்மானத்தை முறியடிக்கும் முயற்சியில் இலங்கை முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

ஈரான் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஈரானுக்குச் சொந்தமான நான்கு வணிகக் கப்பல்கள், இலங்கை தேசியக் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துமாறு கோரி ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணைக்கு எதிராக இலங்கை அரசாங்கம் பாரிய பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.

அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் விஜயம் செய்திருந்தபோது அவரது பாதுகாப்பிற்காக சென்ற அதிகாரியொருவர் சட்டத்திற்குப் புறம்பாக இரத்தனக்கற்கள் சிலவற்றை எடுத்துச் சென்றதை பாகிஸ்தான் சுங்கப் பிரிவு அதிகாரியொருவர் கண்டறிந்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தை தற்காலிகமாக வேறு இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில், அந்தக் கட்சியின் தொழிற்சங்கத்திற்கு இடம் எதுவும் ஒதுக்கப்படவில்லையெனக் கூறப்படுகிறது.
மேலதிகக் ஆக்கங்கள்...
- ஊடகவியலாளர் சுனந்த மீது மீண்டும் சேறுபூசிய சுயாதீன தொலைக்காட்சி!
- போராட உரிமையுண்டு அணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில்
- ஐ.நாவில் இலங்கை அரசின் விவரணப்படம்! முறியடித்து தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவோம்!
- 40 ஆயிரம் பொதுமக்கள் படுகொலையை மூடி மறைக்க முடியாது! இலங்கைக்கு எதிரான பிரேரணை வலுப்பெறுவது உறுதி!- ஈலின் டொனஹோ
- தேசிய நூதனசாலையில் இருந்த வாள் ''பலி பூசைக்காக'' திருடப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம்!






